- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் முழு வலிமையோட இல்ல...இது அந்த மாதிரி விக்கெட் இல்ல.. நான் நல்லா ஆடுனதுக்கு காரணம்...

நான் முழு வலிமையோட இல்ல…இது அந்த மாதிரி விக்கெட் இல்ல.. நான் நல்லா ஆடுனதுக்கு காரணம் இது தான் – வெற்றிக்கு பிறகு சுப்மன் கில் பேச்சு

- Advertisement 1-

இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 92 ரன்களை குவித்து, அசத்திய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் தனது உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவித்து உள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்ட சுப்மன் கில் தனது உடல் முழு வலிமை பெறவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

சுபமன் கில் தவிர, விராட் கோலி (88) மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் (82) ரன்களால் இந்திய அணி 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது. இத்துடன் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பேசிய சுப்மன் கில் தனது உடல்நிலை குறித்த உண்மையை தெரிவித்தார்.

“முழு உடல் விலமையுடன் இல்லை. டெங்கு பாதிப்பை தொடர்ந்து எனது உடல் நான்கு கிலோ வரை எடை குறைந்து இருக்கிறது. போட்டியின் போது பந்து சிறப்பாக சீம் ஆனது. இதன் காரணமாக என்னால் சிறப்பாக ஆட முடிந்தது. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். முந்தைய போட்டியை தவிர்த்து, கடந்த போட்டிகளில் நல்ல துவக்கம் கிடைத்தாக உணர்ந்தேன்.”

“இன்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டுருந்தோம். உண்மையில், இந்த விக்கெட்டில் 400 ரன்களை அடிக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து, 350 ரன்களை குவித்தோம். பிறகு எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.”

- Advertisement 2-

“ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். சிராஜ் எப்போதும் தீயாக இருப்பார். பவுலர்கள் மிகவும் பரபரப்பாகவே இருந்தனர். அவர்கள் தான் எங்களது பணியை எளிமையாக்கினர். ஸ்ரேயாஸ் இன்று சிறப்பாக செயல்பட்டு, ரன்களை குவித்தார்,” என்று தெரிவித்தார்.

சற்று முன்