- Advertisement -
Homeகிரிக்கெட்சர்ச்சையான 2 விக்கெட்... அவுட்டே இல்லை என அடித்து கூறும் ரசிகர்கள்... பரிதாப நிலைக்கு சென்ற...

சர்ச்சையான 2 விக்கெட்… அவுட்டே இல்லை என அடித்து கூறும் ரசிகர்கள்… பரிதாப நிலைக்கு சென்ற ஆஸி

-Advertisement-

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான 10-ஆவது லீக் போட்டியானது லக்னோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி குண்டன் டீ காக் (109) மார்க்ரம் (56) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது துவக்கத்திலேயே மிட்சல் மார்ஷ் (7), டேவிட் வார்னர் (13) ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்ததால் பெரிய சிக்கலில் சிக்கியது.

பின்னர் அதிலிருந்து மீளாத ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க 40.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோருக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது சர்ச்சைக்குரிய விடயமாக மாறி உள்ளது.

ஏனெனில் பிரபாடா வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்வீட் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றாலும் ரிவியூவிற்கு சென்றபோது பந்து ரீப்ளேவில் ஸ்டெம்பில் பட்டது போன்று காண்பிக்கப்பட்டு அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

-Advertisement-

ஆனால் ரியல் டைமில் பந்தை பார்க்கும்போது பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகி செல்வது போன்று தெரிந்தது. இந்த விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்மித் வருத்தத்துடனே களத்தில் இருந்து வெளியேறினார். அதேபோன்று ரபாடா வீசிய பந்து ஸ்டாய்னிஸ் இடுப்பு பக்கம் சென்றது. அந்த பந்து பேட்டில் பட்டதாக நினைத்து டி காக் அவுட் கேட்க அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இருப்பினும் மூன்றாவது அம்பயரிடம் ரெவியூ கேட்க அந்த ரீப்ளேவில் பந்து கையுறையில் பட்டது போன்று தெரிந்தது.

ஆனால் ஒருபுறம் பந்து பேட்டில் படாதது போலவும் தொடையில் உராசியது போன்றும் இருந்தது. இருந்தாலும் அம்பயர் ஸ்னிக்கோ மீட்டர் உதவியுடன் பந்து கையுறையில் பட்டது என்று கூறி அவரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். அந்த சமயத்தில் பந்து பட்ட அந்த கையை கொண்டு அவர் பேட்டை பிடிக்கவில்லை. பேட்டில் கை தொடர்பில்லாமல் இருக்கும் சமயத்தில் பந்து கையுறையில் பட்டு அதை பீல்டரோ அல்லது கீப்பாரோ பிடித்தால் அது அவுட் கிடையாது என்பது கிரிக்கெட் விதி.

என்னினும் தெளிவான விளக்கம் இல்லாததால் இந்த விக்கெட்டை ஏற்றுக் கொள்ள முடியாத ஸ்டாய்னிஸ்ஸும் அதிருப்தியுடன் வெளியேறினார். இப்படி ஒரே போட்டியில் இரண்டு முடிவுகள் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரண்டு விக்கெட்டுகளுமே அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் ஏன் இதற்க்கு அவுட் கொடுக்கப்பட்டது என்று ஆஸ்திரேலியா ரசிங்கர்கள் புலம்பி வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்