- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியாவின் மாஸான சாதனை.. ஒரே நாளில் முறியடித்து வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..

இந்தியாவின் மாஸான சாதனை.. ஒரே நாளில் முறியடித்து வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக செய்த முக்கியமான சாதனையை ஒரே நாளில் முறியடித்து அசத்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பொதுவாக டி20 போட்டிகள் என்றாலே அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் சென்று வரும் நிலையில் டி 20 உலக கோப்பைத் தொடர் அப்படியே நேர் மாறாக நடைபெற்று வருகிறது.

குறைவான ரன்களை அடிக்கும் அணிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்று வரும் சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் அப்படி ஒரு முடிவு தான் அமைந்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் சேர்ப்பதற்குள் முக்கிய வீரர்கள் அவுட்டாகி கிளம்ப, பின்னர் வந்த வீரர்கள் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் 20 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்திருந்தனர். இதுவே அமெரிக்க மைதானங்களில் சவாலான ஸ்கோராக இருக்கும் சூழலில் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி ரன்கள் சேர்க்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தும் சிறிய தடுமாற்றம் கண்டிருந்தது.

ஆனாலும் கடைசி கட்டத்தில் நல்ல பார்ட்னர் ஷிப் அமைந்ததால் அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உருவாக கடைசி ஓவரில் 11 ரன்கள் வேண்டும் என்று சூழல் இருந்தது. இந்த ஓவரை அற்புதமாக வீசிய கேசவ் மகாராஜ், 6 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார்.

- Advertisement 2-

அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட குறைந்த ரன்கள் அடித்த போதும் அதில் வெற்றியைக் கண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் குறைந்தபட்ச இலக்கை கட்டுப்படுத்தி வெற்றி கண்ட அணி என்ற இந்தியாவின் சாதனையை தற்போது முறியடித்துள்ளது தென்னாப்பிரிக்கா.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்க, தற்போது அதனை ஒரே நாளில் காலி செய்து மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்