- Advertisement -
Homeகிரிக்கெட்10 வருஷம் பழைய ரெக்கார்ட்.. இத்தனை அதிரடி இருந்தும் இன்னும் தொட்டு பாக்க முடியாத ரெய்னாவின்...

10 வருஷம் பழைய ரெக்கார்ட்.. இத்தனை அதிரடி இருந்தும் இன்னும் தொட்டு பாக்க முடியாத ரெய்னாவின் சம்பவம்..

-Advertisement-

இத்தனை அதிரடியாக ஆடி பேட்டிங் செய்ய ஐபிஎல் தொடரில் நிறைய சாதகங்கள் இருந்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த சுரேஷ் ரெய்னாவின் மிக முக்கியமான சாதனை ஒன்றை யாராலும் தொட முடியாததை பற்றி தற்போது பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த போட்டியை எடுத்துக் கொண்டாலும் ஏதோ ஒரு அணியாவது 200 ரன்களை அடித்திருக்கும் நிலைமை தான் சமீபத்திய போட்டிகளில் இருந்து வருகிறது.

முன்பு எல்லாம் ஐபிஎல் போட்டிகளில் 180 ரன்களை கடப்பதே அதிக ஸ்கோராக இருப்பதுடன் அதுவே சேச்சிங் செய்வதற்கும் மிக கடினமாக இருக்கும். ஆனால் நடப்பு சீசனில் இம்பாக்ட் ப்ளேயர் உள்ளிட்ட சில விதிகள், பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருப்பதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீசி நிறுத்திக் கொள்வதன் காரணமாக எட்டாவது, ஒன்பதாவது வீரர்கள் வரையிலும் பேட்ஸ்மேன்கள் ஒரு அணியில் இடம் பெற்று வருகின்றனர்.

இதனால் அனைவருமே ஆடி ரன் சேர்க்க இருநூறு ரன்களை கடப்பதே மிக எளிதான விஷயமாகவும் மாறிவிட்டது. இந்த அதிரடியால் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருந்தாலும் மற்ற சிலர் கொஞ்சம் வெறுப்பு அடைந்தும் வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பவர் பிளேவில் 80 முதல் 100 ரன்கள் வரை மிக அசால்டாக வந்து விடுகிறது. இந்த சீசனில் கூட பல போட்டிகளுக்கு மேல் பவர் பிளேவில் ரன் அடித்திருந்த நிலையில் 250 ரன்களையும் ஏறக்குறைய ஐந்து அணிகள் தாண்டிவிட்டது.

இப்படி ஐபிஎல் தொடரில் அனைத்து விஷயங்களும் எளிதாகி விட்ட அதே வேளையில் சுரேஷ் ரெய்னாவின் முக்கியமான ஒரு பத்து ஆண்டுகள் ரெக்கார்டை மட்டும் எந்த வீரர்களாலும் இந்த சீசனில் இதுவரை உடைக்க முடியவில்லை. ஐபிஎல் பவர் பிளேவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா தான் பெற்றுள்ளார்.

-Advertisement-

கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 25 பந்துகளில் 87 ரன்கள் அடித்திருந்தார் சுரேஷ் ரெய்னா. இந்த சீசனில் டிராவிஸ் ஹெட் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ஜேக் ஃப்ரேஷர் 78 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் டிராவிஸ் ஹெட் மற்றொரு முறை 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எந்த வீரராலும் சுரேஷ் ரெய்னா ரெக்கார்டை இத்தனை அதிரடிக்கு மத்தியில் தாண்ட முடியாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-Advertisement-

சற்று முன்