- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த இளம் வீரர் தான் டார்கெட்.. ரோஹித் போடப் போகும் மாஸ்டர் பிளான்.. உண்மையை சொன்ன...

அந்த இளம் வீரர் தான் டார்கெட்.. ரோஹித் போடப் போகும் மாஸ்டர் பிளான்.. உண்மையை சொன்ன ரெய்னா..

- Advertisement 1-

இந்திய அணியில் தற்போது ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர், சுழற்பந்து வீச்சாளர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் போட்டி மிக அதிகமாக உள்ளது. அடுத்தடுத்து பல இளம் வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக தேர்வாகி வருவதால் இரு தரப்பு தொடரில் கூட ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரிய சிக்கல் தான் உள்ளது. அப்படி ஒரு சூழலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் எப்படி இந்திய அணி தங்களின் வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்பதே மிகப்பெரிய ஒரு விவாதமாகத் தான் உள்ளது.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும், விக்கெட் கீப்பர் இடத்திற்காக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஜிதேஷ் ஷர்மா உள்ளிட்ட வீரர்களும் என பலரும் தங்களின் இடத்துக்காக போட்டி போட்டுக் கொண்டு மோதி வருகின்றனர். சுழற்பந்துவீச்சு பக்கத்திலும் கூட குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் என கடும் போட்டியே உள்ளது.

இதனால் இவை அனைத்தையும் சரியாக்கிக் கொண்டு எந்த 15 முதல் 20 வீரர்களை இந்திய அணி உலக கோப்பைக்காக தேர்வு செய்யப் போகிறது என்பதில் தான் அனைவரின் பார்வையும் உள்ளது. அதேபோல ஐபிஎல் தொடரும் வர இருப்பதால் தற்போது சில முன்னாள் வீரர்கள் கூட இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்காக யாரெல்லாம் ஆடலாம் என்ற தங்களின் விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, உலக கோப்பைக்கான இந்திய விக்கெட் கீப்பர்கள் யார் என்பது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்திய அணியை பொருத்தவரையில் சஞ்சு சாம்சன் ஒரு பெரிய ஆயுதமாக இருப்பார். ஏனென்றால் அவர் எந்த இடத்திலும் பேட்டிங் இறங்கி ஆடக்கூடியவர். அதேபோல விக்கெட் கீப்பராக ஜிதேஷ் ஷர்மாவும் இருக்கிறார்.

- Advertisement 2-

ஆனால் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரோஹித் சர்மாவின் முதல் விருப்பமாக ரிஷப் பண்ட் தான் இருப்பார் என தோன்றுகிறது. இனி வரும் ஐபிஎல் போட்டிகளளில் அவர் எப்படி ஆடுவாரோ அதனை பொறுத்து அவர் உலக கோப்பைத் தொடருக்கும் தேர்வாகலாம் என தெரிகிறது.

ரிஷப்பிற்கு பிறகு அடுத்த ஆப்ஷனாக இஷான் கிஷான் இருப்பார். ஜிதேஷ் ஷர்மா சிறப்பாக கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்தாலும் அவரை விட சஞ்சு சாம்சன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் பெரிய அளவில் ரன் குவிப்பதுடன் ஒரு கேப்டன் போலவும் பொறுப்புணர்ந்து ஆடி வருகிறார்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

சற்று முன்