- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெயிச்சுடலாம்னு நினைச்சோம், ஆனா.. செஞ்ச தப்பை ஒத்துக்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. அடுத்த பிளான் இதுதான்..

ஜெயிச்சுடலாம்னு நினைச்சோம், ஆனா.. செஞ்ச தப்பை ஒத்துக்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. அடுத்த பிளான் இதுதான்..

- Advertisement 1-

ஐபிஎல் குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றிருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

தற்போதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் முதல் போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்த சூழலில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி பேட்டிங் செய்து இன்னிங்ஸ் முடிவடைய சரியாக 3 பந்துகள் இருந்த போது மழை குறுக்கிட்டிருந்தது.

முன்னதாக, இந்திய அணி வீரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகினர். பின்னர் வந்த திலக், சூர்யகுமார், ரிங்கு சிங் உதவியுடன் இந்திய அணி மீண்டு வந்து சிறந்த ஸ்கோரை சேர்க்கவும் உதவியது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 68 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் எடுத்தனர். இதனால், இந்திய அணி 19.3 ஓவர்களில், 180 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து, மழை பெய்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட, இலக்கும் அவர்களுக்கு எளிதானதாக அமைந்தது. தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் 49 ரன்களும், மார்க்ரம் 30 ரன்களும் எடுக்க, தென்னாப்பிரிக்க அணி 14 வது ஓவரிலேயே இலக்கை எட்டி தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement 2-

இந்த நிலையில், தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “முதலில் இது ஒரு சிறந்த ஸ்கோர் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால், அவர்கள் (தென்னாப்பிரிக்க அணி) முதல் 5 – 6 ஓவர்கள் அழகாக ஆடி போட்டியை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். நாங்கள் பேசி கொண்டிருக்கும் கிரிக்கெட் பிராண்ட் என்பது இது தான். களத்தில் இறங்கி நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பந்து ஈரமாக இருந்ததால் அதனை கொண்டு வீச கடினமாக இருந்தது. எதிர்காலத்திலும் இதே போன்ற கடினமான சூழ்நிலையை நாங்கள் சந்திக்க நேரிடலாம். இது எங்களுக்கு ஒரு சிறந்த பாடம் தான். மூன்றாவது டி 20 போட்டிக்காக காத்திருக்கிறோம்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்