- Advertisement 3-
Homeவிளையாட்டுகோப்பையை வென்றதும் சூர்யகுமார் செய்த விஷயம்.. அப்படியே தோனி வழியில நடக்குறாருபா.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்..

கோப்பையை வென்றதும் சூர்யகுமார் செய்த விஷயம்.. அப்படியே தோனி வழியில நடக்குறாருபா.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடர் முடிவடைந்த சூழலில், அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது ஷமி, பும்ரா உள்ளிட்டோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதனிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை இளம் வீரர்கள் அதிகம் நிறைந்த இந்திய அணி தான் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால், ருத்துராஜ், ரிங்கு சிங், ரவி பிஷ்னோய் என ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்கள், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஒன்றாக இணைந்து ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து அற்புதமாக ஆடி இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் அனுபவமிக்க சில வீரர்கள் இருந்த போதும் அவர்களால் இளம் படையை சமாளிக்க முடியவில்லை. ஓரளவுக்கு இந்திய அணியை எதிர்த்து போராடி பார்த்தும் அது பலனளிக்காமல் போனது. இதனால், தொடரை இழக்கும் சூழலும் உருவாகி இருந்தது. தங்களின் தோல்வியின் காரணம் குறித்து ஒருமுறை பேசியிருந்த ஆஸி. கேப்டன் மேத்யூ வேட், சுழற்பந்து வீச்சை பெரிய அளவில் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவுக்கு ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேலின் சூழல், ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்ததால், நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி சாதனை புரிவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, டி 20 தொடருக்கான கோப்பையை வாங்கிய பின்னர் இந்திய கேப்டன் சூர்யகுமார் செய்த செயல் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

- Advertisement 2-

ஐந்தாவது டி 20 போட்டி முடிவடைந்த பின்னர், கோப்பையை கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது கோப்பையை கைப்பற்றி வீரநடை போட்டு வந்த சூர்யகுமார் யாதவ், வீரர்கள் அருகே வந்ததும் யாரும் எதிர்பாராத செயல் ஒன்றை செய்தார். இந்திய அணியின் இளம் வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரிடம் கோப்பையை கொடுக்க அவர்களும் பேரானந்தத்தில் கோப்பையை உயர்த்தி காண்பித்தனர்.

இந்திய அணி கண்ட தலைசிறந்த கேப்டனான எம்.எஸ். தோனி, எதாவது கோப்பையை கைப்பற்றினால் நேராக இளம் வீரர்கள் கையில் கொடுத்து விடுவார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது கூட சக வீரர்கள் கையில் கோப்பையை கொடுத்து விட்டு பின்னால் சென்று நின்று விட்டார் தோனி. அப்படி ஒரு சிறந்த பண்பை தோனி கடைபிடித்து வந்த சூழலில், அதே ரூட்டை தற்போது கேப்டனான முதல் தொடரிலேயே சூர்யகுமார் யாதவ் பின்பற்றி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்