- Advertisement -
Homeகிரிக்கெட்பைனல் முடிந்த அடுத்த நாள் சிவம் துபே எனக்கு போன் செய்து, இதை எல்லாம் கூறினார்....

பைனல் முடிந்த அடுத்த நாள் சிவம் துபே எனக்கு போன் செய்து, இதை எல்லாம் கூறினார். சிலர் நினைப்பது போல் கிடையாது தோனி – ரகசியம் பகிர்ந்த ராஜாமணி.

-Advertisement-

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இந்த சீசனில் சிவம் துபேவின் ஆட்டத்தை நாம் பல நேரங்களில் ரசித்திருப்பபோம். அதே வேலையில் தோனியின் அசாத்திய திறமை மற்றும் அணியை அவர் நிர்வகிக்கும் முறை இப்படி பலரவற்றை பலர் கூறி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர் ராஜாமணி மணி தோனி குறித்து தாம் அறிந்த சில சுவாரஸ்ய தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எப்போதும் அதில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பார்கள் அதே சமயம் இளம் வீரர்களும் இருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். சிவம் துபேவை எடுத்துக் கொண்டால், ராஜஸ்தான் அணியில் இருந்த போது அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு எல்லாமே முற்றிலும் மாறியது. அவருக்கான வாய்ப்பு சிறப்பாக வழங்கப்பட்டது.

சிவம் துபே ராஜஸ்தான் அணியில் இருக்கும் போது நாங்கள் இருவரும் தான் அவ்வப்போது சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். பொதுவாக இரண்டு நபர்கள் ஒன்றாக அமர்ந்து எப்போதும் பேசிக் கொண்டே இருந்தால் அணியில் ஏதாவது தவறாக பேசக்கூடும். ஒருசமயம் சிவம் துபே என்னிடம் இப்படி கூறினார், ராஜா உனக்கும் இது முதல் வருடம் எனக்கும் இது முதல் வருடம். நாம் இருவரும் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்போது நான் உன்னை அழைத்து பேசுவேன் என்று கூறினார்.

அவர் கூறியது போலவே சிஎஸ்கே அணி வென்றதும் அதற்கு அடுத்த நாள் எனக்கு கால் செய்து, இப்பொழுது பார்த்தீர்களா நாம் இருவரும் சக்சஸ்ஃபுல் நபர்களாக ஆகிவிட்டோம். நீங்களும் ஒரு பெரிய ட்ரெயினராகி விட்டீர்கள் நிறைய இன்டர்நேஷனல் பிளேயர்களுக்கு டிரெயினிங் கொடுக்கிறீர்கள். நானும் இப்பொழுது ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். இதற்கு தோனி மிக முக்கிய காரணமாக இருக்கிறார் என்று அவர் என்னிடம் கூறினார்.

-Advertisement-

இது தவிர்த்து நான் இன்னொரு எடுத்துக்காட்டையும் கூறுகிறேன். ஆகாஷ் சிங் என்று ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். அவர் ராஜஸ்தான் அணியில் ஒரு சமயம் நெட் பௌலராக இருந்தார். அப்போது அவர் என்னிடம் சிஎஸ்கே அணியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்று கூறினார். உடனே நான் அவரிடம் கூறினேன், தயவு செய்து நீ சிஎஸ்கே அணிக்கு சென்று விடு. நீ அங்கு சிறப்பாக செயல்பட்டு தோனியின் கண்களில் பட்டு விட்டால் உன்னை அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு கொண்டு வருவார் என்று கூறினேன். அவரும் அதே போல சிஎஸ்கே அணியில் சேர்ந்தார். தோனியும் அவருக்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்தார்.

பொதுவாக தோனி பெரிய பெரிய ஆட்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் நீங்கள் உற்று நோக்கினால் தெரியும், அவர் மற்ற ஆணிகளால் ஒதுக்கப்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தான் மெருகேற்றுகிறார். உதாரணத்திற்கு ரகானேவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை ஆனால் அவரை தோனி எடுத்து இப்போது அவரை நல்ல ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார். இது குறித்து இணையத்தில் கூட சமீபத்தில் ஒரு தகவலை இளைஞர்கள் பதிவிட்டு இருந்தனர். இந்த வருடம் ரகானே அடுத்த வருடம் யார் மனிஷ் பாண்டேவா என்பது போல் இருந்தது அந்த பதிவு.

இதையும் படிக்கலாமே: தோனிக்கு இந்த சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. தோனி என்னிடம் விரும்பி சாப்பிட கேட்டது இது தான். தோனிக்கு உணவளித்தது குறித்து ரகசியம் பகிர்ந்த செப்

அதே போல பதிரானவை எடுத்துக் கொள்வோம். அவரும் ஒரு நெட் பௌளராக இருந்தவர் தான். அவரை இப்போது மிகப்பெரிய ஒரு பவுலராக மாற்றி உள்ளார் தோனி. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் அமைதியாகவும் இருக்க வேண்டும். அந்த ஒரு சமநிலையை தோனி சிஎஸ்கே வில் ஏற்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் ராஜாமணி.

-Advertisement-

சற்று முன்