- Advertisement 3-
Homeவிளையாட்டுஜஸ்ட் மிஸ்.. ஃபைனலில் 76 ரன்கள் அடிச்சதால் தப்பிச்ச கோலி.. இல்லனா மானமே கப்பலேறி இருக்கும்..

ஜஸ்ட் மிஸ்.. ஃபைனலில் 76 ரன்கள் அடிச்சதால் தப்பிச்ச கோலி.. இல்லனா மானமே கப்பலேறி இருக்கும்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸில் இருந்து சொந்த ஊர் திரும்பும் அவர்கள் நாளை (04.07.2024) அதிகாலை வந்து சேர்ந்து விடுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் காலை உணவை சாப்பிட உள்ள இந்திய அணி வீரர்கள், அடுத்தாக மும்பையில் வைத்து திறந்த வெளி பேருந்தில் கொஞ்ச தூரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக செல்ல உள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டும் தோனி தலைமையிலான பாகிஸ்தான் அணியை டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் வீழ்த்தி தென்னாபிரிக்க மண்ணில் வரலாறு படைத்திருந்தது. இந்த வெற்றிக்கு பின்னர் கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த போது இதே போன்று மும்பை மாநகரில் திறந்த வெளி பேருந்தில் அவர்கள் ஊர்வலமும் மேற்கொண்டிருந்தனர்.

இதே போன்று மீண்டும் ஒரு சம்பவம், 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் இந்திய ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், டி20 உலக கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய வீரர்களை வேற லெவலில் வரவேற்கவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று பல நாட்கள் ஆனாலும் இன்னும் அதை சுற்றி இருந்த பல நினைவலைகள் பற்றிய கருத்து ரசிகர்கள் மத்தியில் பரவலாக தான் இருந்து வருகிறது. அந்த போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அதுவரை ஒரு போட்டியில் கூட அரைச் சதம் கூட அடிக்காமல் விமர்சனத்தை சந்தித்து வந்த கோலி, தூண் போல நின்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement 2-

கோலி எடுத்த 76 ரன்கள், தங்களின் ஸ்கோரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்திருந்தது. அத்துடன் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினையும் அறிவித்துள்ள கோலி, இனி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரத்தை கழிப்பார் என தெரிகிறது.

இதனிடையே, டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் கோலி 50 ரன்களைக் கடந்ததன் மூலம் ஒரு முக்கியமான சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார் கோலி. இதுவரை மொத்தம் 13 ஐசிசி தொடர்கள் ஆடியுள்ள கோலி, அதில் ஒரு போட்டியிலாவது 50 ரன்களை கடந்திருந்தார்.

ஆனால் இந்த முறை, இறுதி போட்டி வரைக்கும் 50 ரன்களைத் தொடாமலே இருந்த கோலி, கடைசி போட்டியில் பட்டையை கிளப்பி 76 ரன்கள் சேர்த்திருந்தார். ஒரு வேளை அவரால் 50 ரன்கள் அடிக்க முடியாமல் போயிருந்தால் அப்படி நடக்காமல் போன முதல் ஐசிசி தொடராகவும் கோலிக்கு இது அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்