- Advertisement -
Homeகிரிக்கெட்அந்த பையன பாத்து கத்துக்கோங்க... ஆரஞ்ச் கேப் தலையில் இருந்தும் கோலிக்கு வந்த சோதனை..

அந்த பையன பாத்து கத்துக்கோங்க… ஆரஞ்ச் கேப் தலையில் இருந்தும் கோலிக்கு வந்த சோதனை..

-Advertisement-

விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனில் 400 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் கெத்தாக வலம் வருவதுடன் மட்டும் இல்லாமல் ஆரஞ்சு கேப்பையும் தன்வசம் வைத்துள்ளார். அவர் ஆடிவரும் ஆர்சிபி அணி எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று அவர்களின் பிளே ஆப் வாய்ப்பும் மிக மிக குறைவாக இருக்கும் அதே வேளையில் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருப்பது கோலியின் பேட்டிங் மட்டும்தான்.

இதுவரை 9 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி 430 ரன்கள் குவித்துள்ளதுடன் மட்டும் இல்லாமல் இந்த சீசனில் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். கோலி அதிகமாக ரன்கள் குவித்துள்ள அதே வேளையில் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கோலி பேட்டிங் செய்ததையே சொல்லலாம். 43 பந்துகளை சந்தித்திருந்த விராட் கோலி, நான்கு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 51 ரன்கள் சேர்த்திருந்தார். தொடக்க வீரராக களம் இறங்கியும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 118 தான் இருந்தது.

அவருடன் இறங்கிய கேப்டன் பாப் டு பிளஸ்ஸிஸ் அதிவேகமாக கிடைத்த பந்துகளில் எல்லாம் ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார். அதேபோல பின்னர் வந்த இளம் வீரர் ராஜத் படிதரும் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 250 வரை இருந்த நிலையில் அவரைப் போலவே அடித்த ஆடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தபோதிலும் மிக நிதானமாக ஆடி ஒரு நாள் போட்டி போல ரன் சேர்த்திருந்தார் விராட் கோலி.

-Advertisement-

பெங்களூர் அணி 206 ரன்கள் அடித்திருந்தாலும் விராட் கோலி இன்னும் அதிரடி காட்டி இருந்தால் நிச்சயம் நல்லதொரு ஸ்கோரையும் எட்டி ரன் ரேட்டை ஏற்றுவதற்கான வழிகளையும் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இருந்தும் ஒரு சில போட்டிகளில் கோலி தொடர்ந்து தனது ஸ்ட்ரைக் ரேட்டை மிக குறைவாக வைத்து ஆடி வருவது ரசிகர்களையும் சற்று சலிப்பு அடைய வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணியில் தொடர்ந்து குறைந்த பந்துகளில் அரை சதமடித்து வரும் ராஜத் படிதரை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் என வேடிக்கையாகவும் லெஜெண்ட் இடத்தில் இருக்கும் கோலியை ஒப்பிட்டு குறிப்பிட்டு வருகின்றனர் சில ரசிகர்கள்.

-Advertisement-

சற்று முன்