- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் ரோஹித், கோலி?.. பிசிசிஐ போடும் பரபர பிளான்.. உண்மையை உடைத்த...

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் ரோஹித், கோலி?.. பிசிசிஐ போடும் பரபர பிளான்.. உண்மையை உடைத்த பயிற்சியாளர்..

- Advertisement 1-

உலக கோப்பைத் தொடர் முடிவடைந்ததும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் நடைபெற்றிருந்தது. கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வில் இருந்ததால் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி, 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் ஆட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதே பல்வேறு சலசலப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் உருவானது. இதற்கு காரணம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரிலும் ரோஹித் மற்றும் கோலி உள்ளிட்டோர் இடம்பெறாமல் போனது தான். கடந்த 2021 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பின்பாக,ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே டி 20 போட்டிகளில் ஆடவில்லை. அதே போல, 2024 ஆம் ஆண்டுக்கான டி 20 உலக கோப்பைக்கும் இன்னும் ஆறு மாத காலமே பாக்கி உள்ளது.

இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து டி 20 தொடரில் இளம் வீரர்களை பயன்படுத்தி வருவதால், கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் டி 20 போட்டிகள் மற்றும் உலக கோப்பையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர் என்றும் ஒரு தகவல் பரவியது. அதே போல, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் அவர்கள் இனி கவனம் செலுத்துவார்கள் என்றும் இந்த முடிவு குறித்து பல்வேறு யூகங்கள் இருந்து வந்தது.

இன்னொரு பக்கம், கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் அனுபவம் டி 20 உலக கோப்பைக்கு தேவை என்பதால், அவர்கள் நிச்சயம் உலக கோப்பையில் ஆடுவார்கள் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ஆடி அவர்கள் உலக கோப்பையில் தயாராகி கொள்வார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

- Advertisement 2-

இதனிடையே, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் அணியில் இடம்பெறாதது பற்றி இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வில் இருப்பதால் தெனாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என நீங்கள் கருதக்கூடாது. அனைத்து வீரர்களுக்கும் சரிசமமாக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் நாங்கள் கவனமாக இருக்கிறோம். சிறந்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய தேவையே இல்லை.

இளம் வீரர்கள் தென்னாப்பிரிக்க தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க தான் அவர்களுக்கு இந்த தொடரில் அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி காரணம் எதுவுமே இல்லை” என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளதால் நிச்சயம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் டி 20 உலக கோப்பைத் தொடரில் ஆடுவார்கள் என்றே தெரிகிறது.

சற்று முன்