- Advertisement 3-
Homeவிளையாட்டுநிறைய விஷயம் பாக்கணும்... டெய்லி கண்காணிக்கணும்... ஹர்திக் பாண்டியா அணிக்கு திருப்புவது குறித்து ரோகித் சர்மா...

நிறைய விஷயம் பாக்கணும்… டெய்லி கண்காணிக்கணும்… ஹர்திக் பாண்டியா அணிக்கு திருப்புவது குறித்து ரோகித் சர்மா பேச்சு

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங், பந்துவீச்சு, அசாத்திய ஃபீல்டிங் என மும்முனைகளிலும் பக்கபலமாக, நம்பிக்கை அளிக்கும் வீரராக ஹர்திக் பாண்டியாவை கூறிவிட முடியும். தரமான வேகப்பந்துவீச்சு-ஆல்-ரவுண்டர் இந்திய அணிக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கக்கூடிய வகையில், தற்போது ஹர்திக் பாண்டியா இந்தியாவின் இத்தகைய வீரராக விளங்குகிறார்.

நடப்பு உலகக்கோப்பை 2023 தொடரில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். எனினும், காயம் காரணமாக அவரின் சேவை இந்திய அணிக்கு கடந்த சில போட்டிகளில் கிடைக்கவிடாமல் செய்துவிட்டது. அக்டோபர் 19-ம் தேதி பூனேவில் வங்காளதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்துவீசிய போது, ஹர்திக் பாண்டியாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “மிகவும் சாதகமான வளர்ச்சி. நான் இதை ரீஹப் என்று கூறிவிட முடியாது, ஆனால் என்ன நடைமுறை என்றாலும் அதை அவரும், என்.சி.ஏ.-வும் எடுத்தனர். அதிலும் அவர்களுக்கு நல்ல முடிவுதான் கிடைத்திருக்கிறது. அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்.”

- Advertisement 2-

“காயத்தை பொருத்தவரை, அதனை ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும். எந்த அளவுக்கு காயம் சரியாகி இருக்கிறது, அவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சுமை பற்றி கண்காணிக்க வேண்டும். உலகக் கோப்பை தொடரை பொருத்தவரை ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளியில் போட்டிகள் உள்ளன. அவர் மேற்கொள்ளும் சிறப்பான பணிகளால், அவரை விரைவில் சந்திப்போம்,” என்று தெரிவித்தார்.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, காயமுற்று இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நவம்பர் 12-ம் தேதி நெதர்லாந்து அணியுடனான போட்டி வரை அணிக்கு திரும்புவதில் வாய்ப்புகள் குறைவுதான் என்று கூறப்படுகிறது. நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை நவம்பர் 12-ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

சற்று முன்