- Advertisement 3-
Homeவிளையாட்டுகண்ணை மூடிக்கிட்டுலாம் பேட்டை சுத்தல... செம பிரஷர்... என் மனசுல இது தான் ஓடும் -...

கண்ணை மூடிக்கிட்டுலாம் பேட்டை சுத்தல… செம பிரஷர்… என் மனசுல இது தான் ஓடும் – ரோகித் அதிரடி பேச்சு

- Advertisement 1-

உலகக் கோப்பை 2023 தொடரில் தனது ஆட்டம் சிறப்பானதாக இருக்கும் போதிலும், அதை ஆக்கப்பூர்வமான ஒன்றாக முடித்துக் கொள்ள தவறி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருக்கிறார். துவக்கம் முதலே பந்துவீச்சாளர்களை பதம்பார்க்கும் வகையில் விளையாடி வரும் ரோகித் சர்மா, தனது ஷாட்கள் ஒவ்வொன்றும் பதற்றம் இன்றியும், சிரமம் இன்றியும் காட்சியளிப்பது போன்ற ஸ்டைலை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் போட்டிகளில் சில சிறப்பான சம்பவங்களை ரோகித் செய்திருந்தாலும், அதிக சவால் நிறைந்த லக்னோ ஆடுகளத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அடித்த 87 ரன்கள், புது டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவரின் கடுமையான தாக்குதல் உள்ளிட்டவை அவரின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஷாட்களை அடிக்கும் முன்பு அணிக்கு என்ன தேவை என்பதையும், போட்டியின் சூழல் உள்ளிட்டவைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பது வெளிப்படுகிறது.

இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பேட்டியளித்த ரோகித் சர்மா, “எனது பேட்டிங்கை நான் என்ஜாய் செய்தாலும், அணிக்கு என்ன தேவை என்பதும், கள சூழலும் என் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். களத்தில் இறங்கியதும், கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுற்ற வேண்டும் என்றில்லை – நான் எனது பேட்-ஐ சிறப்பாக பயன்படுத்தி, நன்றாக விளையாடி அணியை நல்ல சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டும்- இது தான் எனது எண்ணம்.”

“நான் ஓபன் செய்யும் போது, ஸ்கோர்போர்டு பூஜ்ஜியமாக இருக்கும், போட்டிக்கான நிலையை நான் அமைத்துக் கொடுக்க வேண்டும். விக்கெட் வீழாத நிலையிலேயே களமிறங்குகிறேன், இதனால் பேட்டிங்கை துவக்குவது எனக்கு சாதகமான ஒன்று என நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் போட்டியை துவக்கி வைக்கும் போது பயமின்றி விளையாட முடியும், ஆனால் கடந்த போட்டியின் பவர்பிளேயில் எங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது, நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்,” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement 2-

சற்று முன்