- Advertisement 3-
Homeவிளையாட்டுகம்பீர் இல்ல.. இந்திய அணியின் பயிற்சியாளராக மாறப் போகும் முன்னாள் தமிழக வீரர்?.. கடைசி நேரத்தில்...

கம்பீர் இல்ல.. இந்திய அணியின் பயிற்சியாளராக மாறப் போகும் முன்னாள் தமிழக வீரர்?.. கடைசி நேரத்தில் கலைந்த ஆட்டம்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடிவரும் நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. இதில் இந்திய அணிக்கு சில முக்கியமான பலப்பரீட்சை இருக்கும் நிலையில் அவற்றில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கு முன்னேறி அதே உத்வேகத்துடன் இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் அவர்களுக்கு உருவாகலாம்.

அப்படி இருக்கையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பைத் தொடருடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அவரது பதவிக்காலம் முடிந்து அதனை நீட்டித்து டி20 உலக கோப்பை தொடர் வரை பயணித்த ராகுல் டிராவிட் இத்துடன் தனது பயிற்சி காலத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித், டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளராக தொடர கேட்டுக் கொண்டும் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது பற்றிய கேள்விகளும் அதிகமாக இருந்து வர கவுதம் கம்பீர் தான் இந்திய அணியை வழிநடத்த போகிறார் என ஒரு சில உறுதியான தகவல்களும் வெளியாகி இருந்தது.

அது மட்டுமில்லாமல் ஏராளமானோர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் கம்பீர் மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் இதனால் நேர்காணலின் முடிவில் அவர் இந்திய அணியின் தலைமை பேச்சாளராக போட்டியின்றி விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement 2-

இதனால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார் என்ற நிலையில் தான் தற்போது தமிழகத்தில் இருந்து முன்னாள் வீரர் ஒருவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக சில டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டியில் ஆடி உள்ளவர் டபுள்யூ வி ராமன். இவர் தமிழ்நாடு அணிக்கு உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இது தவிர கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். ஏராளமான இளம் வீரர்களை இதன் மூலம் இந்திய அணிக்காக தயார் செய்யும் முக்கிய பங்கும் கிடைத்திருந்த நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்திருந்தார் டபுள்யூ வி ராமன்.

அப்படி இருக்கையில் கம்பீர் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தேர்வாவார் என எதிர்பார்த்தால் இந்திய அணியை வருங்காலத்தில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் பிசிசிஐ நிர்வாகத்தினரை டபுள்யூ வி ராமன் அதிகம் ஈர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் படி கம்பீர் மற்றும் ராமன் ஆகியோர் வீடியோ கால் மூலம் இன்டர்வியூவில் கலந்து கொண்டதாகவும், இதில் கம்பீரை விட டபுள்யூ வி ராமன் கொடுத்த ஐடியா அனைவரையும் ஈர்த்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தியாவில் இருந்து இல்லாமல் இன்னும் ஒரு வெளிநாட்டு வீரர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் நேர்காணலில் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் யார் இறுதியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதை பிசிசிஐ தெரிவிக்கும் என்றும் தெரிகிறது.

சற்று முன்