- Advertisement 3-
- Advertisement 1-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் தலைமையில் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல வைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இறுதிப் போட்டியில் 12 ரன்ரேட் தேவைப்பட்ட இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் எட்டியது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மற்றும் பேட்டர் ஷிவம் துபே ஆகியோர் ஐபிஎல் 2023 வெற்றியைத் தொடர்ந்து டிரஸ்ஸிங் அறையில் கேப்டன் எம்எஸ் தோனி தங்களிடம் பேசியதை தெரிவித்துள்ளனர்.

இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்த துபே, தோனி தனக்கு சிந்தனைத் தெளிவைக் கொடுத்ததையும், அணியில் தனது வேலை என்ன என்பதை தோனி தெளிவுப்படுத்தியதையும் பற்றி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “மஹி பாய் எனக்கு சிந்தனைத் தெளிவைக் கொடுத்தார். அணியில் என்னுடைய பணி என்ன என்று சொன்னார். அவர் என்னிடம் நீ ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். அதனால் நீ  சீக்கிரம் அவுட் ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கொடுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டும் எனக் கூறினார்” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் ஷிவம் துபே கூறியுள்ளார்.

- Advertisement 2-

மற்றொரு இளம் வீரரான தேஷ்பாண்டே தன்னிடம் தோனி கூறியதைப் பற்றி பேசும்போது “ஒருமுறை நான் நன்றாக பந்துவீசவில்லை, அவர் என்னிடம் வந்து, இம்பேக்ட் ப்ளேயர் விதியின் அறிமுகத்துக்குப் பின்னர் , 200 பிளஸ் ஸ்கோர் எல்லாம் சாதாரணமானதுதான் என்றும், எனது இடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார். இளம் வீரர்கள் விரும்பும் உத்தரவாதத்தை அவர் அளித்தார்,” என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல்-ல் விளையாடியதன் விளைவால் சொந்த நாட்டிற்காக விளையாட முடியாமல் போன ரஷித் கான் – அடடா நல்ல பௌலர் ஆச்சே என வருந்தும் ரசிகர்கள்.

மேலும் பேசியுள்ள தேஷ்பாண்டே “அனைவரின் கடின உழைப்புக்கும் பலன் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார், ஆனால் இந்த ஆண்டு சரியாக என்ன செய்தோம், எங்கு தவறு செய்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறினார். மஹி பாய் என்னிடம் ‘இந்த பருவம் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது, அடுத்து என்ன செய்வது, அதைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறினார்” எனக் கூறியுள்ளார்.