- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக் பத்தி எனக்கு தெரியாது, ரோஹித்தோட கேப்டன்சில கை வெச்சா.. துணிவாக சொன்ன யுவராஜ் சிங்..

ஹர்திக் பத்தி எனக்கு தெரியாது, ரோஹித்தோட கேப்டன்சில கை வெச்சா.. துணிவாக சொன்ன யுவராஜ் சிங்..

- Advertisement 1-

இந்திய அணியை டி 20 உலக கோப்பையில் யார் வழிநடத்த போகிறார்கள் என்பது பற்றி ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலரும் ரோஹித் ஷர்மா தான் என உறுதியாக சொன்னாலும் கூட, சிலர் அவர் சீனியர் வீரராக இருப்பதால் அவரை விட ஹர்திக் பாண்டியா உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் 14 மாதங்கள் கழித்து சர்வதேச டி 20 போட்டிகளில் இடம்பிடித்துள்ளதும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அவர்கள் இருவரும் ஆடி வந்ததால் துடிப்பான இளம் வீரர்கள் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி வந்தனர். ஆனால், விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளதால் அவர்களின் இடமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அந்த இரண்டு பேரும் டி 20 உலக கோப்பையில் ஆடும் போது கடந்த ஒரு வருடமாக தயாரான இளம் வீரர்கள் சிலர் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பையே இழந்து விடுவார்கள். இதனால், கடந்த ஒரு வருடமாக முன்னேற்ற பாதையில் பயணித்த இந்திய டி 20 அணி, ரோஹித் மற்றும் கோலி வருகையால் திரும்ப பின்னடைவை கண்டுள்ளது என்றும் சில கிரிக்கெட் பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர்.

இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் டி 20 உலக கோப்பைத் தொடருக்கு தற்போதே இத்தனை பெரிய விவாதங்கள் உருவாகி உள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், கோலி மற்றும் ரோஹித் வருகை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

- Advertisement 2-

“சில பேர் இது பற்றி சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். அவர்களுடைய வேலையும் அதுதான். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை ஆடி வருவதால் நிச்சயம் அவர்களுக்கு ஓய்வு தேவை. வேலைப்பளுவும் அதிகமாக இருப்பதால் தான் 14 மாதங்கள் கழித்து அவர்கள் டி 20 அணியில் இணைந்துள்ளார்கள். இது அணியின் தேர்வாளர்களுக்கான கேள்வியாகும்.

அதே போல டி 20 உலக கோப்பையிலும் ரோஹித் ஷர்மா தான் அணியை வழிநடத்த வேண்டும். அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன். ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். உலக கோப்பையின் இறுதி போட்டி வரை இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கான சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்துள்ளார். அவரது வேலைப்பளுவை இந்திய அணி தான் சமாளிக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் நிலை என்ன என்பது எனக்கு தெரியாது. அதை தேர்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்