- Advertisement -
Homeசினிமாகம் பேக் கொடுக்கும் கவுண்டமணி, ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம், கேமியோ ரோலில் ஸ்டார் நடிகர்?...

கம் பேக் கொடுக்கும் கவுண்டமணி, ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம், கேமியோ ரோலில் ஸ்டார் நடிகர்? வேற லெவல் தகவலா இருக்கே!

-Advertisement-

கவுண்டமணி தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயலாக பல காலங்கள் வழுவிழக்காமல் அடித்துக்கொண்டிருந்தவர். காலம் உள்ளவரை கவுண்டமணியின் காமெடிகளும் நிலைத்திருக்கும். அந்தளவுக்கு தனது கவுண்ட்டர் வசனங்களின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இவரும் செந்திலும் இணைந்து கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி கடைசியாக 2016 ஆம் ஆண்டு “வாய்மை” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கவுண்டமணி மீண்டும் கம் பேக் கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர் மதுரை செல்வம் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் தான் தயாரிக்கவுள்ள “பழனிச்சாமி வாத்தியார்” என்ற திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளார் என கூறினாராம். கவுண்டமணியிடம் பல இயக்குனர்கள் கதை கூறியதாகவும் அதில் எல்லாம் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறிய அவர், “பழனிச்சாமி வாத்தியார்” திரைப்படத்தின் கதையை கேட்டதும் அவருக்கு பிடித்துப்போனதாகவும் உடனே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார் எனவும் கூறினாராம்.

“பழனிச்சாமி வாத்தியார்” திரைப்படத்தில் கவுண்டமணியே கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சஞ்சனா என்ற நடிகை நடிக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை அன்பரசன் என்பவர் இயக்கவுள்ளாராம். அதே போல் இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் வருகிறாராம். மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த 11 தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்களாம். இவ்வாறு இத்திரைப்படம் குறித்து உண்மைக்கு நெருக்கமான பல தகவல்கள் வருகின்றன.

-Advertisement-

கவுண்டமணி நேற்றுதான் தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

-Advertisement-

சற்று முன்