- Advertisement -
Homeசினிமாபாகிஸ்தான் அணியுடன் மோத சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு... இதில் மட்டும் சாதித்தால் மரியாதை வேற...

பாகிஸ்தான் அணியுடன் மோத சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு… இதில் மட்டும் சாதித்தால் மரியாதை வேற ரகத்தில் இருக்கும்…

-Advertisement-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் தன் பக்கம் திருப்பியவர் தான் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன். டி என் பி எல் தொடரில் கலக்கி ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு பெயரை வாங்கியவர் சாய் சுதர்சனுக்கு மேலும் பெரிய சாதனை படைக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஐபிஎல் இல் கலக்கிய பிறகு டிஎன்பிஎல் தொடரில் களம் இறங்கிய சாய் சுதர்சன் விளையாடிய 6 போட்டிகளில் நான்கு அரை சதம் கடந்து அசத்தினார். 21 வயதான சாய் சுதர்சனுக்கு வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய ஏ அணியில் இடம்பெற்றார்.

இதில் யுஐக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 8 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், நேபாளம் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார்.

இந்த நிலையில் சாய் சுதர்சனுக்கு அடுத்தது மிகப்பெரிய ஒரு போட்டி இருக்கிறது. வரும் புதன்கிழமை கொழும்புவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.

-Advertisement-

இதில் சாய் சுதர்சன் மட்டும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி விட்டால் அவருக்கு காலத்தால் அழியாத புகழ் கிடைக்கும். மேலும் இந்திய அணியில் இடம் பெற தகுதியான நபர் என்ற பெயரும் கிடைக்கும். இதனால் சாய் சுதர்சன் மட்டுமல்ல யாஷ் தூல், ஹங்கர்கேகர் போன்ற அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார்கள்.

சாய் சுதர்சன் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.நேபால் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் நன்றாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் சுழற் பந்து வீச்சு நல்ல பலமாக இருக்கிறது. இதன் காரணமாக முதலில் பொறுமை காத்து பிறகு அதிரடியாக விளையாடும் யுத்தியை சாய் சுதர்சன் பயன்படுத்தினால் அது அவருக்கு நன்மையை பயக்கும்.

இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று நிலையில் பாகிஸ்தானின் வீழ்த்தினால் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விடும்.

-Advertisement-

சற்று முன்