- Advertisement 3-
Homeசினிமாதிரையரங்கில் இருந்து கார்த்தியை துரத்திவிட்ட திரையரங்கு உரிமையாளர்கள், ஏன் தெரியுமா?

திரையரங்கில் இருந்து கார்த்தியை துரத்திவிட்ட திரையரங்கு உரிமையாளர்கள், ஏன் தெரியுமா?

- Advertisement-

கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு “ஜப்பான்” திரைப்படத்தின் அட்டகாசமான இன்ட்ரோ வீடியோ வெளிவந்து இணையத்தில் வைரலானது.

“ஜப்பான்” திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

- Advertisements -

இந்த நிலையில் கார்த்தி ஒரு திரையரங்கில் இருந்து துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கார்த்தி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பல ஹிந்தி திரைப்படங்களை விரும்பி பார்ப்பாராம். அப்போது ஒரு முறை ஆமீர்கான் நடித்த “ரங்கீலா” திரைப்படத்தை தனது கல்லூரி நண்பர்களுடன் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது திரையரங்கிற்குள் அனைவரும் ஓடியிருக்கின்றனர். இதனை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கார்த்தியையும் அவரது நண்பர்களையும் வெளியே துரத்திவிட்டார்களாம். அதன் பின் அடுத்த ஷோவிற்கு மீண்டும் டிக்கெட் வாங்கி படம் பார்த்திருக்கிறார்கள். இவ்வாறு சமீபத்திய ஒரு பேட்டியில் கார்த்தி பகிர்ந்துகொண்டுள்ளார்.

கார்த்தி தொடக்கத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய “ஆய்த எழுத்து” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். அதனை தொடர்ந்துதான் கார்த்தி “பருத்திவீரன்” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி தமிழ் சினிமாவின் தனித்துவ நடிகராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement-

அவரது திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த தமிழ் நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்