சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் சகோதரி, என்ன படத்துல தெரியுமா?

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தந்தையின் பெயர் ஜி.சுரேஷ் குமார். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தாயாரின் பெயர் மேனகா. இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர்.

கீர்த்தி சுரேஷிற்கு ஒரு சகோதரி உண்டு. அவரது பெயர் ரேவதி சுரேஷ். ரேவதி கலாமந்திர் என்ற பெயரில் மலையாளத்தில் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார். இவ்வாறு கீர்த்தி சுரேஷிற்கு சினிமா சம்பந்தமான குடும்ப பின்னணி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் சகோதரியான ரேவதி சுரேஷ், ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். அந்த குறும்படத்தின் பெயர் “தாங்க் யூ”. ரேவதி சுரேஷ் இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதனை தொடர்ந்து தற்போது தனது முதல் குறும்படத்தை இயக்கியுள்ளார். இக்குறும்படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரேவதி சுரேஷ்.

அதில், “எனது தாயார் மேனகா சுரேஷ், தந்தை சுரேஷ் குமார், எனது மற்றுமொரு தாய் தந்தையர் ஆன ஜலஜா மோகன் மற்றும் மோகன் நாயர் ஆகியோர்களின் நல்லாசிகளுடன், எனது குருக்களான டாக்டர். பத்மா சுப்ரமணியம், இயக்குனர் பிரியதர்ஷன், யோகா ஆச்சார்யா தாரா சுதர்ஷன் ஆகியோருக்கும் எனது வணக்கங்களை சொல்லி, நான் இயக்கிய எனது முதல் குறும்படமான தாங்க் யூ  குறும்படத்தை இந்த போஸ்டருடன் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு வழிகாட்டிய மற்றும் எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

- Advertisement -

எனக்கு தூணாக இருந்து ஆதரித்த எனது மொத்த குடும்பத்திற்கும் குறிப்பாக எனது கணவர் நிதின் மோகனுக்கும் எனது சகோதரிகள் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என ரேவதி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்