- Advertisement -
Homeசினிமாஇந்திய பவுலர்கள் இதை சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க... அதனாலதான் வேகமாக பந்து வீசராங்க.. அப்ரிடி பேச்சு

இந்திய பவுலர்கள் இதை சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க… அதனாலதான் வேகமாக பந்து வீசராங்க.. அப்ரிடி பேச்சு

-Advertisement-

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் செயல்படவில்லை என்றும் அவர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உலக அணிகளுக்கு அச்சிறுத்தும் வகையில் திகழ்ந்து வருகின்றனர்.

அதேபோன்று அடுத்த தலைமுறை வீரர்களான பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என அடுத்த தலைமுறைக்கான வீரர்களும் உருவாகி வருகின்றனர். அதோடு தற்போது உள்ள முன்னணி அணிகளுக்கு எதிராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் கூட்டணி அச்சுறுத்தலாக மாறி வரும் வகையிலும் இந்திய அணி முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதோடு ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி வேகப்பந்து வீச்சில் தங்களது பலத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு முன்னேற்றம் கண்டனர் என்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்தியா ஒரு பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடு. எனவே அங்குள்ள கிரிக்கெட் தற்போது மிகவும் தரம் வாய்ந்ததாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக வழக்கமாக இந்திய அணி பேட்ஸ்மேன்களையும், பாகிஸ்தான அணி பவுலையும் உருவாக்கி வந்தது.

-Advertisement-

இவ்வேளையில் தற்போது இந்திய அணியின் பவுலர்கள் பெரிதளவு முன்னேற்றம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் யாதெனில் : இந்திய வீரர்கள் அதிக அளவில் இறைச்சியை உண்பதால் அவர்களது உடல் பலம் அதிகரித்து அவர்களது திறனும் அதிகரித்துள்ளது என்று அப்ரிடி கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

எது எப்படி இருப்பினும் தற்போது உள்ள நிலையில் சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பவுலராக ஆசிய கோப்பை தொடரிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அதே போன்று பும்ரா, முஹமது ஷமி, ஹார்டிக் பாண்டியா, ஷர்துல் தாகூர் என இந்திய அணி வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்