சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இதில் மிஷ்கின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே போல் பல வருடங்களாக தயாராகி வரும் “அயலான்” திரைப்படமும் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்திருந்தாலும் அத்திரைப்படம் ஏலியனை மையப்படுத்தி உருவான ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என்பதால் பல கிராஃபிக்ஸ் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தனர். ஆதலால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே இருந்தது. தற்போது ஒரு வழியாக இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இத்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. ஆனால் G20 மாநாடு நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனினும் மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது இணையத்தில் சிவகார்த்திகேயனின் புதிய லுக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் நரைத்த தாடியுடன் மிகவும் மாஸ் ஆக தென்படுகிறார். தனது 21 ஆவது திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஆதலால்தான் இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் என கூறப்படுகிறது.