- Advertisement -
Homeகிரிக்கெட்ரிங்கு சிங் மேல தப்பில்ல.. நாங்க தான் அவரை செலக்ட் பண்ணல.. பக்காவான காரணம் சொன்ன...

ரிங்கு சிங் மேல தப்பில்ல.. நாங்க தான் அவரை செலக்ட் பண்ணல.. பக்காவான காரணம் சொன்ன அஜித் அகர்கர்..

-Advertisement-

ஐபிஎல் தொடர்களின் தாக்கம் காரணமாக இந்திய அணியில் எப்போதுமே எந்த தொடர் ஆடுவதற்கும் 20 முதல் 25 வீரர்கள் தயாராக உள்ளனர். இதனால் எந்த இருதரப்பு தொடர் என்றால் கூட அதில் அறிவிக்கும் அணிக்கே ஏராளமான விமர்சனங்கள் உருவாகும்.

அப்படி இருக்கையில் தான் தற்போது டி 20 உலக கோப்பை தொடருக்காக 15 வீரர்களை இந்திய அணி அறிவித்திருந்த நிலையில் பல விமர்சனங்களும் இதை சுற்றி எழுந்திருந்தது. இன்று இந்திய அணியில் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருப்பதால் யாரை தேர்வு செய்ய வேண்டும்? யாரை தேர்வு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய குழப்பமாக தான் நிச்சயம் பிசிசிஐக்கு இருந்திருக்கும்.

அதெல்லாம் மீறி, பல விஷயங்களை ஆராய்ந்த பின்னர் தான் நிச்சயம் இந்த 15 வீரர்களை அவர்கள் தேர்வு செய்து இருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே அணியில் சேர்ந்தது, சாஹலுக்கு கிடைத்த வாய்ப்பு என பல சிறப்பம்சங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படி பல அசத்தலான விஷயங்கள் இருந்தாலும் ரிங்கு சிங் இந்த அணியில் இடம் பிடிக்காமல் போனது ஏன் என்பது தான் இந்திய ரசிகர்களை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் ரிங்கு சிங், பல டி 20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய பங்கு வகித்திருந்தார். தொடர்ந்து அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய டி 20 கிரிக்கெட் அணியின் ஸ்டார் ஆகவும் வருங்காலத்தில் வரும் வாய்ப்பு அவருக்கு உள்ளது.

-Advertisement-

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஏழாவது அல்லது எட்டாவது வீரராக களமிறங்கி வரும் நிலையில் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை அதிக பலத்துடன் திகழ்வதால் பெரும்பாலான போட்டிகளில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பும் அதிகம் கிடைப்பதில்லை.

ஒருவேளை அவர் தனது திறமையை தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் பேட்டிங் செய்து நிரூபித்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தான் ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காத காரணம் பற்றி தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“ரிங்கு சிங் அணியில் இடம் பெறாமல் போனது அவருடைய தவறு கிடையாது. அணியில் நாங்கள் விரும்பிய காம்பினேஷனுக்காக தான் இது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டது. விரிஸ்ட் ஸ்பின்னர்கள் அடிப்படையில் நிறைய ஆப்ஷன்கள் வேண்டும் என்று எங்களுக்கு தோன்றியது. சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் அதை எங்களுக்கு கொடுப்பார்கள். இதே போல இரண்டு கிரிக்கெட் வீரர்களும் அணியில் வேண்டும் என்பதால் தான் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்