- Advertisement -
Homeகிரிக்கெட்சாம்சன் ஓகே.. ராகுல்கிட்ட அந்த திறமை இல்ல.. இந்திய வீரர்கள தேர்வு செஞ்சதே இத வெச்சு...

சாம்சன் ஓகே.. ராகுல்கிட்ட அந்த திறமை இல்ல.. இந்திய வீரர்கள தேர்வு செஞ்சதே இத வெச்சு தான்.. உளறிய அகர்கர்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் முடிந்த ஒரு வாரத்தில் டி 20 உலக கோப்பை நடைபெற உள்ள சூழலில், இந்த தொடரின் அடிப்படையில் சில வீரர்கள் இந்திய அணியில் தேர்வாவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சஞ்சு சாம்சன் இந்த சீசனில் சில முக்கியமான போட்டிகளில் தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திருந்தார்.

அதேபோல சென்னை அணியில் அடி வரும் அதிரடி வீரர் ஷிவம் துபே மிடில் ஆர்டரில் இறங்கி, சிக்ஸர்களை அனுப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்தும் வருகிறார். இவர்களைப் போலவே ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நல்லதொரு ஃபார்மில் ஐபிஎல் தொடரில் வலம் வந்ததால் சில ஆண்டுகளுக்கு பிறகு டி 20 உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்த மூவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்தது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் கே.எல் ராகுலை புறந்தள்ளி இருந்தது ரசிகர்களை எந்த வகையிலும் சமரசம் செய்யவில்லை. அதே போல ரிங்கு சிங் நல்ல ஒரு ஃபினிஷர் ரோலில் இந்திய அணிக்காக ஆடி வரும் நிலையில் அவருக்கான இடமும் மறுக்கப்பட்டது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

முன்னதாக ஐபிஎல் தொடரின் போது இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இரண்டு பேர் தேர்வாவார்கள் என்ற கருத்து இருந்தது. அந்த அடிப்படையில் தான் கே எல் ராகுல் நீக்கப்பட்டு மற்ற இரண்டு பேரும் தேர்வாகியுள்ளனர்.

-Advertisement-

கே எல் ராகுலை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பேசி இருந்த அஜித் அகர்கர், “அவர் தொடர்ந்து டாப் ஆர்டரில் தான் பேட்டிங் செய்து வருகிறார். நாங்கள் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ஒரு விக்கெட் கீப்பரை தான் எதிர்பார்த்து வந்தோம். அதனால் தான் சஞ்சு சாம்சனுக்கு அந்த திறமை இருப்பதாக கருதி அவரை நாங்கள் தேர்வு செய்தோம்.

அணியில் எந்தெந்த இடங்கள் வெற்றிடமாக இருக்கிறதோ அதை நிரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும் தான் வீரர்களின் தேர்வு நடந்தது. மேலும் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு பேரும் தேர்வாக காரணமும் அது மட்டும் தான்” என அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்