- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவரோட பேட்டிங்க்காக மட்டும் தான் இந்தியா மேட்சை பாக்குறேன்.. மனம் திறந்து பேசிய வெ. வீரர்...

அவரோட பேட்டிங்க்காக மட்டும் தான் இந்தியா மேட்சை பாக்குறேன்.. மனம் திறந்து பேசிய வெ. வீரர் ஆண்ட்ரே ரசல்..

- Advertisement 1-

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பணிகள் தற்போதில் இருந்தே முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி, துபாயில் வைத்து நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரில் கலக்கிய பல வீரர்கள், தங்கள் பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.

ரசிகர்கள் பலருக்கும் ஐபிஎல் தொடர் என்பது அனைத்து அணிகளின் வீரர்களும் இணைந்து ஆடும் தொடராக இருந்தாலும், இதில் மற்றொரு சிறப்பம்சம் உள்ளது. இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர்கள் தங்கள் திறனை நிரூபித்து சர்வதேச அணிக்காக ஆடும் வாய்ப்பையும் ஐபிஎல் மூலம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில், ஹர்திக் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், ருத்துராஜ், ஜெய்ஸ்வால் என பலரின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் ஜொலித்து பின்னர் இந்திய அணிக்காக ஆடியவர்கள் தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை வெல்ல காரணமே மேற்குறிப்பிட்ட வீரர்கள் தான். ரவி பிஷ்னோய், ருத்துராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளிக்க, இந்திய அணி அசத்தலாக ஆடி இருந்தது. இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல், “நான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகளை முழுவதும் பார்த்து வந்தேன். ஒரு வேளை போட்டியை தவற விட்டால் ஹைலைட்ஸ் ஆவது பார்த்து விடுவேன்.

அதை நான் பார்ப்பதற்கு காரணம் ரிங்கு சிங் தான். அவர் இந்திய அணிக்காக தற்போது சிறப்பாக ஆடுவதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் ஆடியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர் பினிஷராக ஆடுவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. ரிங்கு சிங் போன்று ஒரு அருமையான வீரர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் விதத்தை பார்க்கையில் மனம் நெகிழ்ந்து போகிறது. வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை ரிங்கு சிங் வெளிப்படுத்துவார்” என ஆண்ட்ரே ரசல் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

சற்று முன்