- Advertisement -
Homeகிரிக்கெட்ஆஸி டி20 சீரிசுக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரிங்கு, ருதுராஜிக்கு இடம்.. கேப்டன் தான் இங்க...

ஆஸி டி20 சீரிசுக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரிங்கு, ருதுராஜிக்கு இடம்.. கேப்டன் தான் இங்க ட்விஸ்ட்டே..

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக தற்போது இந்திய அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த வருத்தத்தில் இருக்கும் வேளையில் அடுத்ததாக இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது நடைபெற இருக்கிறது.

இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அணியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலககோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஜடேஜா, பும்ரா, சுப்மன் கில், சிராஜ், ஷமி போன்ற பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதல் மூன்று போட்டிகளுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக இருப்பார் என்றும் கடைசி இரண்டு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புவதால் அவர் கடைசி 2 போட்டிகளுக்கான துணைக்கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-Advertisement-

இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ஏசியன் கேம்ஸ் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய அணி வீரர்கள் பலருக்கும் இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உலககோப்பையில் விளையாடும் வாய்ப்பினை காயத்தினால் இழந்த அக்சர் பட்டேல் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோன்று தமிழக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :

1) சூரியகுமார் யாதவ் (கேப்டன்), 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) இஷான் கிஷன், 4) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஜிதேஷ் சர்மா, 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) அக்சர் படேல், 10) சிவம் துபே, 11) ரவி பிஷ்னாய், 12) அர்ஷ்தீப் சிங், 13) பிரசித் கிருஷ்ணா, 14) ஆவேஷ் கான், 15) முகேஷ் குமார்.

-Advertisement-

சற்று முன்