- Advertisement -
Homeகிரிக்கெட்மேட்ச் ஜெயிச்சா மட்டும் போதுமா.. மும்பை அணி செஞ்சிட்டு வர்ற பெரிய தப்பு.. இப்படியே போனா...

மேட்ச் ஜெயிச்சா மட்டும் போதுமா.. மும்பை அணி செஞ்சிட்டு வர்ற பெரிய தப்பு.. இப்படியே போனா ஆப்பு தான்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணி செய்து வரும் மிகப்பெரிய தவறையும் ரசிகர்கள் சுட்டிக்காட்ட தவறவில்லை. கடந்த சில சீசன்களாகவே ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி போட்டிக்கு தகுந்தது போல பேட்டிங்கிலோ அல்லது பந்து வீச்சிலோ தேவைப்படும் ஒரு வீரரை 12-வது வீரராக, மாற்று வீரராக களமிறக்கி ஆட வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பல பேட்ஸ்மேன்களும், ஃபீல்டிங் செய்யாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி ரன்கள் அடிக்கின்றனர். அதேபோல பந்துவீச்சாளர்களும் பவுலிங்கில் மட்டும் எப்படி விக்கெட்டை எடுத்து எடுக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவதால் முழுக்க முழுக்க இது ஒரு பொழுதுபோக்கு போட்டியாகவும் மாறிவிட்டது.

இப்படி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவதற்கு சாதகமான விதி ஒவ்வொரு அணியின் பக்கம் இருக்கும் நிலையில் அதனை திரும்பத் திரும்ப கோட்டை விட்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக மும்பை வெற்றி பெற்று வருவதை வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிக அருமையாக தெரிந்தாலும் ஏராளமான பிழைகள் அந்த அணிக்கு இடையே உள்ளது.

பந்து வீச்சில் பும்ராவை தவிர யாரும் நிலையான ஒரு பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. கோட்சி சில ஓவர்களை நன்றாக வீசினாலும், தொடர்ச்சியாக அதனை கையாளத் தவறி வருகிறார். இதேபோல பேட்டிங்கிலும் ரோகித், சூர்யகுமார் என ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து நன்றாக ஆடும் நிலையில், ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் இதுவரை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

-Advertisement-

இது தவிர இன்னும் சில குழப்பங்கள் மும்பை அணியில் இருக்கும் நிலையில் தான் இலங்கை வீரர் நுவான் துஷாராவை சரியாக பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர் மும்பை இந்தியன்ஸ். மலிங்காவை போல யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசும் இலங்கை வீரர் பதிரானா, சென்னையில் இடம் பெற்று விக்கெட்டுகளை குவித்து வருகிறார்.

ஏறக்குறைய அவரை விட ஒரு சிறந்த யார்க்கர் கிங் தான் நுவான் துஷாரா என்ற மற்றொரு இலங்கை வீரர். இவர் மும்பையில் இடம்பிடித்துள்ள நிலையில் இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு பந்து கூட வீசாத நிலையில் நுவான் துஷாராவை நிச்சயம் மாற்று வீரராக உள்ளே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதனை மும்பை அணி செய்யாமல் இருக்கும் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி நபிக்கும் ஓவர் கொடுக்கவில்லை.

ஒருவேளை துஷாரா உள்ளே வந்திருந்தால் இந்த போட்டியில் இன்னும் எளிதாக கூட மும்பை அணி வெற்றி பெற்றிருக்கலாம். பந்து வீச்சில் எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் நுவான் துஷாரா, மும்பை அணியில் இருந்த போதிலும் ஒரு முறை கூட அவரை பயன்படுத்தாமல் இருப்பது மத்தியில் மும்பை ரசிகர்கள் மத்தியிலேயே விமர்சனத்தை உண்டு பண்ணி உள்ளது.

-Advertisement-

சற்று முன்