- Advertisement 3-
Homeவிளையாட்டுரிஷப் பந்த் வந்தாலும் டீம்ல இடமில்ல?.. ஜூரேலால் இந்திய அணியில் நடக்க போகும் ட்விஸ்ட்..

ரிஷப் பந்த் வந்தாலும் டீம்ல இடமில்ல?.. ஜூரேலால் இந்திய அணியில் நடக்க போகும் ட்விஸ்ட்..

- Advertisement 1-

டெஸ்ட் போட்டிகள் என்றாலே அனுபவம் உள்ள வீரர்கள் தான் இடம்பெற வேண்டும் என இருந்த ஒரு கருத்தை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பத்து போட்டிகள் கூட இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடாத ஜெய்ஸ்வால், இந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் கடைசி டெஸ்டில் அவர் நூறு ரன்களை அடித்தாலே ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே போல இந்த தொடரில் அறிமுகமான சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரேல், ஆகாஷ் தீப் என அனைத்து இளம் வீரர்களுமே பட்டையை கிளப்பி வருகின்றனர்.

அறிமுகமான டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைச்சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார் சர்பராஸ் கான். இவரைப் போல மற்றொரு இளம் வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 46 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து தனது இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் சீனியர் வீரர்களே ரன் அடிக்காமல் அவுட்டான போது தனியாளாக 90 ரன்கள் அடித்து முதல் இன்னிங்சில் இந்திய அணியை மீட்டெடுத்திருந்தார்.

மேலும் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிய போதும் விக்கெட்டுகள் இழந்து தடுமாற கில்லுடன் அருமையாக ஆடி ரன் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற வைத்திருந்த ஜூரேலுக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்திருந்தது. ரிஷப் பந்த் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் விபத்தில் சிக்கியதன் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருந்து வரும் சூழலில் அவரது இடத்தில் மிக கச்சிதமான வீரராகவும் இருக்கிறார் ஜூரேல்.

- Advertisement 2-

அதனால் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு திரும்பினாலும் தொடர்ந்து ஜூரேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் இதுகுறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்தியா தொடர்ந்து ஜூரேலுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள். ரிஷப் பந்திற்கு உடனடியாக வாய்ப்பை கொடுக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். ரிஷப் பந்த் அணிக்கு திரும்புவதற்கு முன், முதல் தர போட்டிகளில் ஆடி விட்டு பின்னர் தான் சர்வதேச அணிகளுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது தான் அவரது உடல் விபத்திற்கு முன்பு இருந்ததை போல தான் நிலைத்து நின்று ஆடக்கூடிய வகையிலும் பயிற்சி பெற முடியும். ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் உடனடியாக அவரை ஆட வைப்பது பெரிய ரிஸ்க்காக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்