- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல்ல இருக்குற பெரிய பிரச்சனை.. டெஸ்ட் மேட்ச் தான் என் ஃபேவரைட்.. பும்ரா வெளிப்படை..

ஐபிஎல்ல இருக்குற பெரிய பிரச்சனை.. டெஸ்ட் மேட்ச் தான் என் ஃபேவரைட்.. பும்ரா வெளிப்படை..

-Advertisement-

ஐபிஎல் சீசனில் இதுவரை 7 போட்டிகள் ஆடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. நான்கு போட்டிகளில் அவர்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் இந்த மூன்று போட்டிகளில் அந்த அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் இதுவரை 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மும்பை அணியில் மற்ற பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கும் நிலையில், பும்ரா முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியினருக்கு திணறலையும் கொடுத்து வருகிறார். தவிர்க்க முடியாத பவுலராக ஐபிஎல் தொடரில் பும்ரா இருந்து வருவதால் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையிலும் இந்திய அணியின் துருப்புசீட்டாக இருப்பார் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் முதல் 4 விக்கெட்களை பும்ரா மற்றும் கோட்சே ஆகியோர் எடுத்திருந்தனர். இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற பின்னர் கடைசி கட்டத்தில் அசுதோஷ் ஷர்மா அதிரடி காட்டியும் விக்கெட்டுகள் இல்லாததால் பஞ்சாப் அணி 183 ரன்களில் ஆல் அவுட்டானது.

மேலும் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் தான் பும்ரா. நான்கு ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றி இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்கள் கொடுக்க, தனியாளாக போராடி விக்கெட்டுகளை எடுத்ததால் ஆட்டநாயகன் விருதினையும் பும்ரா வென்றிருந்தார்.

-Advertisement-

பத்தாவது முறையாக ஐபிஎல் தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா, “இது மிகவும் நெருக்கமான போட்டி. நாங்கள் நினைத்ததை விட போட்டி அதிக நேரம் சென்றது. பந்தில் ஏதாவது மாற்றம் இருக்கும் சமயத்தில் நீங்கள் நிச்சயம் எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். டி20 ஃபார்மட்டில் பொதுவாக பந்து இரண்டு ஓவர்கள் ஸ்விங் ஆகும். இதனால் அதிக ஓவர்களை நான் பந்து வீச வேண்டும் என விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவேன். அதுதான் என்னுடைய விருப்பங்களை திருப்தி அடைய வைக்கிறது.

இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் டைம் குறைவு விதிகள் இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கு டி 20 ஃபார்மட் சற்று கடினமான ஒரு தொடர் தான். மேலும் பேட்டிங் ஆர்டரும் இதனால் மிக ஆழமாக சென்று விட்டது. ஆனால் அது நமது கட்டுப்பாட்டில் இருக்காது. நான் எப்போதுமே அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஏதாவது செய்தியை சொல்லிக்கொண்டே இருப்பேன். அதே வேளையில், போட்டி அனல் பறக்கும் தருணத்தில் எப்போதுமே அவர்களுக்கு எதையாவது ஒன்றை அறிவுறுத்தி கொண்டிருக்க முடியாது” என பும்ரா கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்