- Advertisement -
Homeகிரிக்கெட்நாங்க போட்ட பிளானை அப்படியே நடத்திட்டோம்.. கதிகலங்கிய தெ.ஆ அணி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ்..

நாங்க போட்ட பிளானை அப்படியே நடத்திட்டோம்.. கதிகலங்கிய தெ.ஆ அணி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ்..

-Advertisement-

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுவதற்காக சென்றிருந்தது. இதில், முதலாவதாக நடந்த டி 20 தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில், தொடரும் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

முன்னதாக, மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னர், சமீபத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 12 ரன்களில் அவுட்டாகி இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றமளித்துள்ளார். மறுபக்கம், இளம் வீரர் ஜெய்ஸ்வால் நன்றாக ஆடி 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதே போல இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டியில் தனது நான்காவது சதத்தை வெறும் 55 பந்துகளில் கடந்து சாதனை புரிந்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 100 ரன்களை அடித்திருந்த சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் வந்த யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காத சூழலில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ஆரம்பத்தில் இருந்தே ரன் எடுப்பதில் ஆட்டம் கண்ட தென்னாப்பிரிக்க அணி, குல்தீப் பந்தை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால், 95 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டான சூழலில், குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரும் சமனில் முடிந்தது.

-Advertisement-

இதனிடையே தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “எப்போதுமே ஜெயிப்பதற்கான காரணங்கள் அமைந்து விட்டால் அது எனக்கு மகிழ்ச்சியை தான் தருகிறது. பயமில்லாத ஒரு சிறந்த கிரிக்கெட்டை ஆட நாங்கள் விரும்பினோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது.

அணி வீர்ரகள் சிறப்பாக தயாரானார்கள். அவர்கள் சிறப்பான விஷயங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. குல்தீப் எத்தனை விக்கெட்டுகள் எடுத்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவர் பசியோடு தான் இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளிலேயே அவர் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தது அவருக்கே அவர் கொடுத்த பிறந்தநாள் பரிசாகும். உங்களின் ஆட்டத்தை அறிந்து ஆட வேண்டியது மிக முக்கியமாகும். நான் மைதானத்தில் ரசித்து ஆடுவதை போல மற்ற விஷயங்களும் அங்கே முக்கியமாகும்” என சூரியகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

-Advertisement-

சற்று முன்