- Advertisement -
Homeகிரிக்கெட்இதுக்கே 10 மேட்ச் ஆயிடுச்சா.. கான்வே இல்லாத குறை.. முதல் முறையாக சிஎஸ்கே செஞ்ச சம்பவம்..

இதுக்கே 10 மேட்ச் ஆயிடுச்சா.. கான்வே இல்லாத குறை.. முதல் முறையாக சிஎஸ்கே செஞ்ச சம்பவம்..

-Advertisement-

சிஎஸ்கே அணி இதுவரை 9 போட்டிகள் ஆடி முடித்துள்ள சூழலில், ஐந்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் தான் தங்களின் பத்தாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் எதிர்த்து ஆடியிருந்தனர். பஞ்சாப் அணி 9 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் உள்ள ஐந்து போட்டிகளில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் சஷாங்க் சிங் எளிதாக எட்டிப் பிடித்து ஐபிஎல் தொடரில் வரலாறு படைத்திருந்தனர்.

அதே உத்வேகத்துடன் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை சந்தித்திருந்த பஞ்சாப் அணி, சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டிருந்தது. ரஹானே 29 ரன்களில் அவுட்டாகி போக, பின்னர் 3 வது வீரராக உள்ளே வந்த ஷிவம் துபே, முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் இரண்டு ரன்களில் அவுட்டாக பத்தாவது ஓவருக்கு முன்பாகவே 70 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளையும் அவர்கள் இழந்திருந்தனர்.

முக்கிய விக்கெட்டுகள் சென்றது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தங்களின் இரண்டு டிஆர்எஸ் ரிவியூவையும் அவர்கள் வீணாக்கி இருந்தது ரசிகர்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அப்படி இருக்கையில் தான் இந்த சீசனில் இதுவரை ஒன்பது போட்டிகளில் செய்யாத ஒரு விஷயத்தை இந்த பத்தாவது போட்டியில் செய்து அசத்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

-Advertisement-

சென்னை அணிக்கு எப்போதுமே தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் மிக அருமையாக அனைத்து சீசனிலுமே இருந்து வந்துள்ளது. இதற்கு உதாரணமாக ஹைடன் தொடங்கி கடந்த சீசனில் ஆடிய கான்வே வரை பலரையும் சொல்லலாம். ஆனால் இந்த சீசனில் காயம் காரணமாக அவர் விலக, ருத்துராஜ் மட்டும் தொடக்க வீரராக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

அவருடன் இணைந்து ஆடிய ரவீந்திரா மற்றும் ரஹானே என இருவருமே நல்லதொரு பார்ட்னராக அமைய முடியாமல் போயிருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் இந்த சீசனில் முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளே ஓவர்களை விக்கெட் இல்லாமல் கடந்துள்ளது. ஒன்பதாவது ஓவரில் தான் ரஹானே 29 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதனால் விக்கெட் இழக்காமல் பவர் பிளேவை அவர்கள் முதல் முறையாக தாண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்