- Advertisement -
Homeகிரிக்கெட்ஹர்திக் இருந்தப்போ கூட இப்டி நடக்கலயே.. குஜராத் டைட்டன்ஸ் பரிதாபங்கள்.. 9 வது ஓவரில் மேட்சை...

ஹர்திக் இருந்தப்போ கூட இப்டி நடக்கலயே.. குஜராத் டைட்டன்ஸ் பரிதாபங்கள்.. 9 வது ஓவரில் மேட்சை முடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் கடந்த சில போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டி அப்படியே நேர்மாறாக அமைந்து விட்டது. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு இளம் கேப்டன்களின் அணிகளும் ஆடி இருந்தது. இந்த போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்திருந்தது.

அணியின் ஸ்கோர் 11 ரன்களாக இருந்த போது கேப்டன் சுப்மன் கில் அவுட் ஆகி இருந்த நிலையில், 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அவர்கள் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி இருந்தனர். மேற்கொண்டு டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளித்து, குஜராத் அணியால் ரன்களை சேர்க்க முடியாத நிலையில், மொத்தம் 64 ரன்கள் வருவதற்குள் 7 விக்கெட்டுகளையும் அவர்கள் இழந்திருந்தனர். ரஷீத் கானை தவிர எந்த ஒரு குஜராத் வீரரும் 20 ரன்களைக் கூட தாண்டாத நிலையில், டெல்லி அணி தரப்பில் அனைத்து பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டு இருந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் ஸ்லோவாக தொடங்கி ரன்கள் அதிகம் வராத போட்டியாக முதல் இன்னிங்சில் குஜராத்தின் பேட்டிங் அமைந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து அதிரடி போட்டிகளை கண்டு வந்த ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு சற்று சலிப்படையவும் செய்திருந்தனர். இதனிடையே 17.3 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த குஜராத் அணி, 89 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.

அதிகபட்சமாக ரஷீத் கான் மட்டும் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மற்ற எந்த வீரரும் 15 ரன்களைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது மாறி உள்ளது. அதே போல, மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் ஆடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோரும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 3 ஓவர்களில் 31 ரன்களை எடுத்திருந்தாலும் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்படி இருக்கையில், சந்தீப் வாரியர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் சேர்க்கப்பட, டெல்லி அணி ஐந்து ஓவரில் 65 ரன்களையும் தொட்டிருந்தனர்.

இதற்கிடையே, 67 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை டெல்லி பறிகொடுக்க, பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பந்த், நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். இதனால், 9 வது ஓவரில் இலக்கை எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3 வது வெற்றியை ருசித்துள்ளது. மறுபுறம், குஜராத் அணிக்கு 4 வது தோல்வியாகவும் அமைந்துள்ளது.

-Advertisement-

சற்று முன்