- Advertisement -
Homeகிரிக்கெட்ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணாதனால தான் தோத்தோமா.. கம்மின்ஸ் வெளிப்படை..

ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணாதனால தான் தோத்தோமா.. கம்மின்ஸ் வெளிப்படை..

-Advertisement-

ஹைதராபாத் அணி அசுர பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வந்த அதே வேளையில் அடுத்தடுத்த போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் எப்போதுமே கில்லியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் மூன்று முறைக்கு மேல் 250 ரன்களைத் தாண்டி விட்டனர்.

ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாஸன் என அனைவருமே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து ஆடி வருவதால் அவர்கள் மிக அசாதாரணமாகவும் 250 நபர்களை தாண்டி இருந்தனர். ஆனால் அதே வேளையில் பெங்களூரு அணிக்கு எதிரான சேசிங்கின் போது அவர்களால் ரன்னை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

அதே போல மீண்டும் சென்னைக்கு எதிராகவும் சேசிங்கில் கோட்டை விட்டு தோல்வி அடைந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 212 ரன்கள் எடுத்திருந்தது. ருத்துராஜ் 98 ரன்களும், மிட்செல் 52 ரன்களும் எடுக்க சென்னை அணி சவாலான ஸ்கோரை எட்டி இருந்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து அவுட் ஆகி இருந்தனர். இதன் காரணமாக பின்னால் ரன் சேர்க்க முடியாமல் 19 வது ஓவரில் 134 ரன்களிலும் ஆல் அவுட் ஆகியிருந்தனர்.

சேசிங்கில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இதன் பின்னர் பேசுகையில், “முதலில் பேட்டிங் செய்யாததால் நாங்கள் தோல்வியடையவில்லை. இது வெற்றி பெறுவதற்கான மிகவும் எளிதான வாய்ப்பு என்று தான் நினைத்திருந்தோம்.

-Advertisement-

சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி 210 ரன்களுக்கு மேல் அடித்திருந்தது. எங்களது பேட்டிங் லைன் அப் அடிப்படையில் பிட்ச்சும் சரியாக இருந்ததால் நாங்கள் வென்று விடலாம் என்று தான் நினைத்தோம். எங்களின் பேட்டிங் வரிசையை நினைத்து பெருமையாக தான் உள்ளது. அந்த வரிசையில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் எதாவது ஒரு போட்டியில் எங்களுக்கு வெற்றியை தேடி தருகின்றனர்.

முதல் இன்னிங்ஸை போல தான் இரண்டாவது இன்னிங்ஸிலும் பனி அதிகமாக இருந்தது. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்” என பேட் கம்மின்ஸ் கூறி உள்ளார். இரண்டு போட்டிகளிலுமே சேசிங்கில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்துள்ளதால் இனி எதிரணிகளும் அவர்களுக்கு எதிராக முதல் பேட்டிங் என்ற மந்திரத்தை கையில் எடுக்கும் என்றும் தெரிகிறது.

-Advertisement-

சற்று முன்