- Advertisement -
Homeகிரிக்கெட்பிலிப் சால்ட், வருண் ஃபார்ம்.. பிளே ஆப் போறோம், தட்டித் தூக்குறோம்.. உற்சாகத்தில் ஷ்ரேயஸ் ஐயர்..

பிலிப் சால்ட், வருண் ஃபார்ம்.. பிளே ஆப் போறோம், தட்டித் தூக்குறோம்.. உற்சாகத்தில் ஷ்ரேயஸ் ஐயர்..

-Advertisement-

ராஜஸ்தான் அணி ஒன்பது போட்டிகளில் எட்டில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அதே வேளையில் இவர்களுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அடுத்த இடத்தில் உள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றுள்ள அவர்கள் புள்ளி பட்டியலிலும் பலமாக உள்ளனர்.

மீதமிருக்கும் ஐந்து போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் வென்றாலே பிளே ஆப் சுற்றை அசால்டாக உறுதி செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கௌதம் கம்பீரின் வருகை தொடங்கி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் அதிரடி தொடக்கம், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு என அனைத்துமே கொல்கத்தா அணிக்கு கைகொடுத்து வருவதால் ஒரு குழுவாக மிகச் சிறப்பாகவும் இந்த சீசனில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டிருந்தது. மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த வேளையில் தான் கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு முட்டுக்கட்டையை போட்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் தான் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 68 ரன்கள் எடுத்து அவுட்டாக பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 17 வது ஓவரில் தங்களின் வெற்றியை உறுதி செய்தனர்.

-Advertisement-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த ஷ்ரேயஸ் ஐயர், “இனிமேல் குறைவாக ரன் வரும் வகையில் பிட்ச் இருக்கும் என்று கிடையாது. கடைசி சில போட்டிகளில் 200 ரன்கள் என்பது தான் சிறந்த ஸ்கோராக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பவர் பிளேவிற்கு பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் உதவ தொடங்கியது. பிலிப் சால்ட் அவருடைய ஐடியாக்களை கொடுத்து வருவதுடன் மிகச் சிறந்த வகையில் தொடர்ந்து ஆடி வருவது சிறப்பாக உள்ளது.

வருண் சக்கரவர்த்தி கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இந்த போட்டியில் மிக அற்புதமாக செயல்பட்டு திட்டங்களை வகுத்து சிறப்பாக பந்து வீசியிருந்தார். இந்த சீசனின் முதல் போட்டியில் இருந்து பிளே ஆப் செல்வதை தான் நாங்கள் பெரிதாக எண்ணி வருகிறோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற வேண்டும் என்றும் ஆடி வருகிறோம்.

புள்ளி பட்டியலை பார்க்காமல் உங்களுடைய செயல் முறையை சிறப்பாக ஈடுபடுத்தினாலே போதும்” என ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.

-Advertisement-

சற்று முன்