- Advertisement -
Homeகிரிக்கெட்சேசிங் பண்றதுக்கு முன்னாடி எங்களோட பிளானே இதான்.. சைலண்டா டெல்லி அணி சம்பவம் செஞ்சதன்...

சேசிங் பண்றதுக்கு முன்னாடி எங்களோட பிளானே இதான்.. சைலண்டா டெல்லி அணி சம்பவம் செஞ்சதன் பின்னணி – ரிஷப் பந்த்

-Advertisement-

ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அவர்களின் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல இந்த தொடரை தொடங்கவில்லை. ரிஷப் பந்த்தின் கம்பேக் வலு சேர்த்திருந்தாலும் ஆரம்பத்தில் அவரது பேட்டிங் பெரிதாக எடுபடாமல் போனதும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வீழ்ந்த டெல்லி அணி, கடந்த இரண்டு போட்டியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றி பெற்று கம்பேகே கொடுத்துள்ளது. ராகுல் தலைமையிலான லக்னோ அணியை வீழ்த்தி இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை ஒரு கை பார்த்து விட்டது என்றே சொல்லலாம்.

குஜராத் அணியை 89 ரன்களில் சுருட்டி, அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் டெல்லி அணி உருவாக்கி இருந்த நிலையில் இலக்கையும் ஒன்பதாவது ஓவர் முடிவதற்குள்ளேயே எட்டி விட்டனர். இந்த சீசனின் தொடக்கம் நல்லதொரு தொடக்கமாக அவர்களுக்கு அமையவில்லை என்றாலும் இந்த போட்டியில் குஜராத் போன்ற அணியை மிக அசால்டாக டீல் செய்து ஊதி தள்ளி டெல்லி அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளனர்.

11 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த், இரண்டு கேட்ச் மட்டும் இரண்டு ஸ்டம்பிங்கையும் செய்திருந்தார். இதன் காரணமாக அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்த நிலையில் இதற்கு பின் பேசியிருந்த ரிஷப் பந்த், “இந்த போட்டியை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. நாங்கள் ஏற்கனவே சாம்பியன் அணியை போல செயல் ஆற்றுவதை பற்றி பேசி இருந்தோம். அதனை இப்போது எனது அணியினர் செய்து காட்டி விட்டனர். அதனை பார்ப்பதும் மிக்க மகிழ்ச்சி.

-Advertisement-

மேலும் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த பவுலிங்காகவும் எங்கள் அணியின் பவுலிங் மாறி இருந்தது. களத்தில் கால் வைப்பதற்கு முன்பாக நல்ல ஒரு வழியில் திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் அனைவரின் எண்ணமாக இருந்தது. மேலும் சேசிங்கிற்கு முன்பாக நாங்கள் பேசியிருந்த விஷயமும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்கு முன்பாக இலக்கை எட்ட வேண்டும் என்பது தான்.

எங்களின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் நாங்கள் அதனை சரி செய்வதற்காக இந்த முடிவை எடுத்திருந்தோம். அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் வைப் மிகச் சிறப்பாக உள்ளது. மேலும் வரும் நாட்களில் இங்கே நிறைய போட்டிகள் ஆட வேண்டும் என்றும் விரும்புகிறேன். இந்த போட்டியின் வெற்றியை ரசித்து விட்டு அடுத்த போட்டிகளில் முன்னேறுவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்” என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்