- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே-விற்காக இதை எல்லாம் கூடவா செய்கிறார் தோனி? வெளிய தெரியாம பல வேலைகளை ரகசியமா இப்படி...

சிஎஸ்கே-விற்காக இதை எல்லாம் கூடவா செய்கிறார் தோனி? வெளிய தெரியாம பல வேலைகளை ரகசியமா இப்படி செய்வார் போல இருக்கே. தோனி குறித்து மேத்தியூ ஹைடன் சொன்ன அல்டிமேட்ட தகவல்

- Advertisement 1-

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று காத்திருக்கிறது. நேற்றைய  போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியோடு வரும் ஞாயிறு அன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த தயாராக உள்ளது சிஎஸ்கே. இந்த முறை கோப்பையை வென்றால் ஐந்து முறை கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற சாதனையை சமன் செய்யும்.

சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மிக மோசமாக தோற்று ப்ளே ஆஃப்க்கு கூட செல்லாமல் வெளியேறியது. அப்போதே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நாங்கள் வலிமையாக திரும்பி வருவோம் எனக் கூறியிருந்தார். சொன்னது போலவே சிஎஸ்கே அணியை வழிநடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த சீசனோடு தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறலாம் என பரவலாக பேசப்படுகிறது. ஒரு வேளை கோப்பையை வென்ற கையோடு தோனி அந்த முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனியோ வீரராகவோ அல்லது களத்துக்கு வெளியேவோ எப்போதும் நான் சிஎஸ்கேவோடு இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தோனி பற்றி அவருடன் சிஎஸ்கே அணியில் சில ஆண்டுகள் இணைந்து விளையாடிய மேத்யு ஹெய்டன் பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பேச்சில் “எம்.எஸ். ஒரு மந்திரவாதி. மற்ற அணிகள் வேண்டாம் என்று ஒதுக்கிய வீரர்களை எடுத்து அவர்களை பொக்கிஷங்களாக மாற்றுபவர் தோனி. திறமையும், நேர்மையும் கொண்ட கேப்டனாக அவர் இருக்கிறார் என கூறினார்.

- Advertisement 2-

இவை எல்லாம் நமக்கு தெரிந்தது தான், ஆனால் நாம் இதுவரை அறிந்திராத சில தகவல்களையும் ஹெய்டன் கூறியுள்ளார். அவர் கூறியது பின் வருமாறு, தோனி என்னிடம் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அது கிரிக்கெட் மீது அவர் கொண்ட காதலையும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அவர் எவ்வாறு அளவு கடந்து நேசிக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

சி.எஸ்.கே மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இடையேயான உறவின் பிணைப்பாக தோனி இருக்கிறார். அவை இரண்டுக்கும் இடையே வலிமையான உறவை அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அணிக்கான சிறப்பான வீரர்களை அவர் உருவாக்குகிறார். இவை எல்லாவற்றை அவர் சரியான வழிமுறையோடு செய்கிறார். இதற்க்கு முன்பு அவர் அதை இந்தியாவுக்காக செய்தார், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு செய்துகொண்டிருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: அந்த ஒரு ஓவர்க்கு அப்பறம் தான் மும்பையை தட்டி தூக்கிடனும்னு முடிவு பண்ணிட்டன் – வெற்றிக்கு பின் சுப்மன் கில் அதிரடி பேச்சு

அடுத்த ஆண்டு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. தனிப்பட்ட முறையில் அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அவர் எம்.எஸ் தோனி ஆயிற்றே” என்று ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசும் போது முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சிஎஸ்கே வீரருமான மேத்யு ஹெய்டன் பேசியுள்ளார்.

சற்று முன்