- Advertisement -
Homeகிரிக்கெட்இனி எத்தனை கோலி, ரோஹித் வந்தாலும்.. தொட்டு பாக்க முடியாத தோனியின் பெருமை.. சிஎஸ்கே ரசிகர்கள்...

இனி எத்தனை கோலி, ரோஹித் வந்தாலும்.. தொட்டு பாக்க முடியாத தோனியின் பெருமை.. சிஎஸ்கே ரசிகர்கள் டிரெண்ட் செய்யும் அந்த விஷயம்

-Advertisement-

இந்திய அணியை எந்த கேப்டனாலும் வழிநடத்த முடியாத அளவுக்கு சிறப்பாக வழிநடத்தி வந்த தோனி, 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச தொடரில் இருந்து விலகுவதற்கு முன்பாக சில காலம் கோலி தலைமையில் தோனி ஆடி வந்தார். அவருக்கு பின்னர் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கோலிக்கு தான் சென்றது.

ஆனால், திடீரென அவரும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க, கிரிக்கெட் உலகில் சலசலப்பை உண்டு பண்ணி. இருந்தது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் இதற்கு காரணம் என விமர்சனம் எழுந்தது. இதற்கு பல முறை விளக்கம் கொடுத்த கங்குலி, கோலி எடுத்த முடிவு தான் அது என்றும் கூறி விட்டார்.

இதனையடுத்து, கோலிக்கு பிறகு இந்திய அணியை சிறப்பாக தலைமை தாங்கி வருகிறார் ரோஹித் ஷர்மா. ஆனால், அதே வேளையில் அவர் ஓய்வில் இருக்கும் தொடர்களில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல் என பலரும் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது அவரே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அணியை தலைமை தாங்கி வந்தார். ஆனால், தற்போது ஒவ்வொரு தொடர்களிலும் ஒரு கேப்டன் என்ற நிலையில் இந்திய அணியின் தொடர்கள் சென்று கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், ரோஹித் இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் ஆட போவதாகவும் தகவல் வெளியாகி இந்திய அணியில் உள்ள கேப்டன்சி குழப்பத்தை இன்னும் பலப்படுத்தி உள்ளது. இதனிடையே, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக தற்போது அடுத்த சீசனின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது.

-Advertisement-

சர்வதேச கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தான் வழிநடத்தி வந்த பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அவரே விருப்பப்பட்டு அறிவித்திருந்தார். அவருக்கு பதிலாக தற்போது பாப் டு பிளெஸ்ஸிஸ் ஆர்சிபி அணியை வழிநடத்தி வருகிறார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்களாக கோலி மற்றும் ரோஹித் நியமிக்கப்பட்டனர்.

அதே போல, இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் தோனி சில சீசன்களில் கேப்டனாக ஆடிய பிறகு தான் தங்கள் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தோனி தற்போதும் ஐபிஎல் தொடரின் கேப்டனாக இருக்கும் சூழலில், அவரது ஐபிஎல் பயணம் முடிவடைவதற்கு முன்பாகவே ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே ஐபிஎல் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டனர்.

இதனை மிகவும் பெருமையாக சிஎஸ்கே ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் சூழலில், பலரும் தோனியின் தலைமையை அண்ணாந்து பார்த்து பெருமைப்பட்டு வருகின்றனர். உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத கேப்டன் என்றும் தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்