- Advertisement -
Homeகிரிக்கெட்சூர்யகுமார், பும்ராவை நிராகரித்த ஹர்திக்.. மேட்ச் ஜெயிச்ச பின்னாடி குசும்ப பாத்தீங்களா..

சூர்யகுமார், பும்ராவை நிராகரித்த ஹர்திக்.. மேட்ச் ஜெயிச்ச பின்னாடி குசும்ப பாத்தீங்களா..

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போதைய ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ஒரு சோதனை காலம் என்றே சொல்லலாம். அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் போல வேறு எந்த அணியிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இல்லை என்ற போதிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிப்பதில் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

முதல் மூன்று போட்டிகளில் தோல்வி, அதன் பின்னர் இரண்டு போட்டிகளில் வெற்றி, மீண்டும் ஒரு போட்டியில் தோல்வி என மும்பை அணி ஆடி வந்தாலும் அவர்கள் அதிரடியாக ஆடும் போது எந்த அணிகளாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. இதனிடையே புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்த மும்பை அணி, எட்டாவது இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸை சந்தித்திருந்தது. இரண்டு அணிகளுமே ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 192 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் வழக்கம் போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, பின்னர் வந்த சஷாங்க் சிங் சிறப்பாக ஆடி 41 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பின்னர் எட்டாவது வீரராக வந்த அசுதோஷ் ஷர்மா, கையில் மூன்று விக்கெட்டுகள் மட்டும் இருந்த போதிலும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார்.

23 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் அரை சதமடித்த அசுதோஷ், ஹர்பீர்த் பிராருடன் இணைந்து 8 வது விக்கெட்டிற்கு நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தாலும் விக்கெட்டுகள் குறைவாக இருந்ததால், கடைசி ஓவரில் 183 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டாகினர். இதன் மூலம், 3 வது வெற்றியை பெற்றதால் மும்பையின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் படு குஷியாக உள்ளார்.

-Advertisement-

இதன் பின்னர் அவர் பேசுகையில், “கிரிக்கெட்டின் மிக சிறப்பான போட்டி இது. அனைவரும் மிக பதட்டமாக இருந்ததால் ஒரு சோதனையாகவும் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் இந்த போட்டியில் பஞ்சாபை விட நாங்கள் முன்னிலையில் இருந்தது போல் தோன்றியது. ஆனால் ஐபிஎல் தொடர் என்பது இதுபோன்ற போட்டிகளை உருவாக்கும் தன்மை கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். ஏழு விக்கெட்டுகளை இழந்த கட்டத்தில் உள்ளே வந்து அப்படி ஒரு ஆட்டத்தை அசுதோஷ் ஷர்மா ஆடியதை நம்பவே முடியவில்லை.

அபாரமாக ஆடிய அவர், அனைத்து பந்துகளையும் மிடில் பேட்டிலேயே வாங்கி இருந்தார். அவரை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் இப்படி ஆட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என ஹர்திக் பாண்டியா கூறினார். மும்பை அணியில் பும்ரா, ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் என யாரையும் பாராட்டாமல் அசுதோஷ் ஷர்மாவை மட்டும் ஹர்திக் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்