- Advertisement -
Homeகிரிக்கெட்பேட்டிங் செஞ்சதுமே மேட்ச் தோத்துட்டோம்.. அடுத்த பிளான் இது தான்.. புலம்பிய ஹர்திக்..

பேட்டிங் செஞ்சதுமே மேட்ச் தோத்துட்டோம்.. அடுத்த பிளான் இது தான்.. புலம்பிய ஹர்திக்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே பாதி லீக்கை ஆடி முடித்துள்ள நிலையில் ஒரு சில அணிகளை தவிர மற்ற எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு போட்டிகள் அமைந்து வருகின்றது. முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் இடம் பிடித்துள்ளது.

இந்த மூன்று அணிகளும் தற்போது பலம் வாய்ந்து விளங்கும் நிலையில் மற்ற அணிகள் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து வருகின்றன. அப்படி இருக்கையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. 20 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி, பின்னர் திலக் வர்மாவின் 65 ரன்கள் மற்றும் வதேராவின் 49 ரன்கள் உதவியுடன் 179 என்ற ஸ்கோரையும் எட்டி இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியும் மிகச் சிறப்பாக மும்பையின் பந்து வீச்சை எதிர் கொண்டு ஆடியது. ஒரு விக்கெட் மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 19 வது ஓவரில் வெற்றி இலக்கை தொட, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் எட்டு போட்டியில் ஏழில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் பலமாக உள்ளனர்.

-Advertisement-

அதே வேளையில், 8 போட்டிகள் ஆடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 3 வெற்றிகளுடன் 7 வது இடத்திலும் உள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் எங்கள் மீது நெருக்கடியை போட்டு விட்டோம். திலக் மற்றும் நேஹால் ஆகியோர் பேட்டிங் அபாரமாக இருந்தது. முதலில் சில விக்கெட்டுகளை இழந்ததும் 180 ரன்களை நெருங்குவோம் என நினைத்து கூட பார்க்கவில்லை.

சிறப்பாக பேட்டிங்கை முடிக்காததால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்தது. பந்து வீச்சிலும் எங்கள் பக்கம் போட்டி திரும்பவில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படாததால் தோல்வியை சந்தித்தோம். தனித்தனியாக வீரர்களை பற்றி இப்போது குறிப்பிடுவது சரியாக இருக்காது. அனைவருமே நன்றாகத்தான் தங்களது கதாபாத்திரங்களை ஆடியிருந்தனர்.

இந்த போட்டியில் நாம் செய்த தவறுகளை எல்லாம் சரி செய்து கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருப்பது தான் சிறந்தது. முன்னேற்றம் காண வேண்டும் என்பது மிக முக்கியம். அணிக்குள் ஒவ்வொருவரின் தவறுகளை சரி செய்து கொண்டு நல்ல கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்” என ஹர்திக் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்