- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ரா செஞ்ச மோசமான செயல்.. சைலண்டாக ஆப்பு வைத்த ஐசிசி.. இனிமேலாச்சும் கவனமா இருங்க பாஸு..

பும்ரா செஞ்ச மோசமான செயல்.. சைலண்டாக ஆப்பு வைத்த ஐசிசி.. இனிமேலாச்சும் கவனமா இருங்க பாஸு..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி அதன் முதல் போட்டியும் முடிவடைந்தது. இதன் முடிவில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா தான் நிச்சயம் வெற்றி பெறும் என ஊரே சொன்ன போது, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்த பென் ஸ்டோக்ஸ் படை, போட்டியின் பாதிக்கு பிறகு வெற்றி பாதையை தங்கள் பக்கம் மாற்றி எழுதி இருந்தது.

இந்திய மண்ணில் அவர்களின் சுழற்பந்தை எதிர்த்து ஆடி ரன் சேர்ப்பதே கடினமாக இருந்த போதிலும் அதனை உடைப்பதற்கான யுக்திகளை தயார் செய்து பக்காவாக தயாரான இங்கிலாந்து அணி, இந்திய அணியின் ஆசையில் மண் அள்ளி போட்டது.

முதல் இன்னிங்சில் அவர்கள் அதிகம் சோபிக்கவில்லை என்ற போதிலும், 2 வது இன்னிங்சில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தரமான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி இங்கிலாந்து அணி முன் தோல்வி அடைந்து சரண்டர் ஆனது. இந்த ஒரே ஒரு தோல்வியின் காரணமாக, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்யாத ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மீது அதிக விமர்சனம் எழுந்திருந்தது.

இதே போல, ஹைதராபாத் மைதானத்தில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவாத இந்திய அணி, முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதே போல, நூறு ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலை வகித்து அவர்கள் தோல்வி அடைந்த முதல் டெஸ்ட் போட்டியும் இதுதான்.

- Advertisement 2-

மேலும் இந்திய மண்ணில் நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில், இரண்டில் தோல்வி அடைந்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கிடையே, சர்பராஸ் கான், ராஜத் படிதார் என முதல் தர போட்டிகளில் கலக்கி வரும் வீரர்கள் 2 வது டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்துள்ளதால் அவர்களை நிச்சயம் ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், முதல் டெஸ்டில் பும்ரா செய்த செயல் ஒன்றிற்கு ஐசிசி அதிரடி ஆப்பு ஒன்றை வைத்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பும்ரா வீசிய பந்தை அடித்து விட்டு ரன் ஓட முயன்றார் ஒல்லி போப். ஆனால், அவரை ஒழுங்காக ரன் ஓட விடாமல் பும்ரா தடுத்ததாக தெரிகிறது.

இப்படி எதிரணி வீரருக்கு இடையூறாக இருந்ததால், அவருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ள ஐசிசி, நன்னடத்தை புள்ளி ஒன்றை குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 24 மாதங்களில் பும்ரா செய்த முதல் குற்றமாக பார்க்கப்படும் நிலையில், ஐசிசி விதிக்கு அவரும் சம்மதம் சொன்னதால், அவர் குற்றத்தை செய்ததும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்