- Advertisement -
Homeகிரிக்கெட்மூன்று டி20 போட்டிகள் தொடர்... இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடக்கப்போகும் போட்டி.. வெளியான அறிவிப்பு

மூன்று டி20 போட்டிகள் தொடர்… இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடக்கப்போகும் போட்டி.. வெளியான அறிவிப்பு

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹஸ்மதுல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் பங்கேற்று விளையாடி நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தினை பிடித்து வெளியேறியது. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் இந்த செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது.

அதிலும் குறிப்பாக முன்னாள் சாம்பியன் அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய பலம் வாய்ந்த நாடுகளை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது.

தற்போது மெல்ல மெல்ல சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி இனிவரும் காலங்களில் பெரிய அணிகளுக்கும் சவாலை அளிக்கும் அணியாக மாறலாம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணிக்கு எதிராக முதன் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

-Advertisement-

இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 17-ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளதாக அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

தற்போதுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள ஏகப்பட்ட வீரர்கள் உலககெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் முக்கிய வீரர்களாக இடம்பெற்று விளையாடி வரும் வேளையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்