- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணிக்கு வரப்போறாரு ரிஷப் பண்ட்.. எந்த தொடரில் தெரியுமா? வெளியான தகவல்

இந்திய அணிக்கு வரப்போறாரு ரிஷப் பண்ட்.. எந்த தொடரில் தெரியுமா? வெளியான தகவல்

- Advertisement 1-

இந்திய டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வந்தவர் இளம் வீரர் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என்று விளையாடிய அனைத்து நாடுகளிலும் சதம் விளாசி ஜாம்பவான் வீரர்களையே பிரமிக்க வைத்தவர். இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்த போது விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் பிழைத்தார்.

இதையடுத்து மருத்துவமனை சிகிச்சையில் புத்துயிர் பெற்ற ரிஷப் பண்ட் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்தார். குறிப்பாக முழங்காலில் ஏற்பட்ட காயம் ரிஷப் பண்ட்-க்கு பெரும் பாதிப்பை கொடுத்தது. இதனால் கிரிக்கெட் களத்திற்கு திரும்பவே 6 மாதங்களுக்கு மேல் ஆகியது. இருப்பினும் யாரின் உதவியின்றி நடக்கும் வீடியோவை வெளியிட்டு விரைவில் கம்பேக் கொடுப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரிஷப் பண்ட் திரும்பினார். அங்கு உடல்நலப் பயிற்சிகளை படிப்படியாக செய்து முன்னேறிய ரிஷப் பண்ட், காயங்களில் இருந்து முழுமையாக விடுபட்டார். இருப்பினும் இழந்த ஃபிட்னஸை மீண்டும் பெறுவதற்கு சில காலமாகும் என்று தெரிகிறது.

தற்போது பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்நலம் குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பயிற்சியின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் சர்வதேச களம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்சிஏ சார்பாக பயிற்சி போட்டிகளிலும் இருவரும் விளையாடவுள்ளனர்.

- Advertisement 2-

அதேபோல், ரிஷப் பண்டை பொறுத்தவரை, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்காக தொடக்க பயிற்சி தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் ரிஷப் பண்ட் உலகக்கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைய 6 மாதங்களாகலாம் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்