- Advertisement -
Homeகிரிக்கெட்ஆடுனது இரண்டே மேட்ச்.. அதுல இப்படி ஒரு சம்பவமா.. 22 வயது ஆஸ்திரேலிய வீரரின் அபார...

ஆடுனது இரண்டே மேட்ச்.. அதுல இப்படி ஒரு சம்பவமா.. 22 வயது ஆஸ்திரேலிய வீரரின் அபார ஆட்டம்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே எப்போதுமே அதிக இளம் வீரர்கள் மீது தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இந்திய அணியில் பல இளைஞர்கள் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக ஐபிஎல் இருந்து வரும் நிலையில் நடப்பு தொடரிலும் சில அதிரடியான இளம் வீரர்கள் பட்டையை கிளம்பி வருகின்றனர்.

லக்னோ அணியில் இடம் பெற்றுள்ள மாயங்க் யாதவ், ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள அபிஷேக் ஷர்மா, ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ள ரியான் பராக் உள்ளிட்ட பலருமே சிறப்பாக ஆடிவரும் நிலையில் வருங்காலத்தில் இந்திய அணியிலும் இடம்பிடித்து இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளது.

அதே வேளையில், டி20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற உள்ளதால் இதிலிருந்து இந்திய அணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றியும் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பொதுவாக இந்திய இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் இந்த முறை சில வெளிநாட்டு இளம் வீரர்களும் கூட ஐபிஎல் தொடரில் தங்கள் திறனை நிரூபித்து வருகின்றனர்.

அதில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் தான் ஆஸ்திரேலியா அணியின் 22 வயதே ஆகும் இளம்வீரர் ஜேக் ஃப்ரேஷர். இவர் டெல்லி அணியில் தற்போது இடம் பிடித்த நிலையில், இதுவரை இரண்டு போட்டிகளில் களம் கண்டுள்ளார். இவர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில், 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார் ஜேக் ஃப்ரேஷர். அதில் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து குஜராத் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆடிய போட்டியில் அவர்களை 89 ரன்களில் சுருட்டியதுடன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியும் 8.5 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இந்த போட்டியில் 10 பந்துகளை எதிர்கொண்ட ஜேக், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களுடன் 20 ரன்கள் அடித்திருந்தார்.

கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சிக்ஸர், ஃபோர்களாக மாற்றும் ஜேக் ஃப்ரேஷர் இந்த இரண்டு போட்டிகளிலும் செய்த ஒரு சிறப்பான சம்பவத்தை தற்போது பார்க்கலாம். இந்த இரண்டு ஆட்டத்திலும் ஜேக் ஃப்ரேஷர் தனது முதல் ரன்னை சிக்ஸர் அடித்து தான் தொடங்கி இருந்தார். அதிலும் குஜராத் அணிக்கு எதிராக டெல்லி ஆடியிருந்த போட்டியில் தனது முதல் பந்தையே சிக்ஸராக அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்