- Advertisement -
Homeகிரிக்கெட்எல்லாம் தோனிய பாத்து கத்துக்கிட்டது தான்.. சங்கக்காரா எனக்கு கொடுத்த அட்வைஸ் - ஜோஸ் பட்லர்

எல்லாம் தோனிய பாத்து கத்துக்கிட்டது தான்.. சங்கக்காரா எனக்கு கொடுத்த அட்வைஸ் – ஜோஸ் பட்லர்

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு முடிவை தான் கொடுத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு அணி வெற்றி பெறும் சூழல் இருக்கும் நிலையில் கடைசி ஓவர்களில் போட்டி அப்படியே மாறுவதுடன் மட்டுமில்லாமல் வெற்றியையும் அந்த அணியிடமிருந்து சக அணி தட்டிப் பறித்து விடுகிறது.

இதற்கு உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் நிறைய போட்டிகளை சொல்லலாம். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி இதற்கு சிறந்த உதாரணமாகவும் உள்ளது. கொல்கத்தா அணி நரைன் சதத்தின் உதவியுடன் 223 ரன்களை குவிக்க தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விட்டனர்.

121 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாற வெற்றிக்கு இன்னும் நூறு ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது உள்ளே வந்த ரோமன் போவெல் தனது பங்கிற்கு 26 ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசி கட்டத்தில் போட்டி இன்னும் டைட்டானது.

மூன்று ஓவர்களில் 46 ரன்கள் வேண்டும் என்ற சூழலில் களத்தில் பட்லர் நிற்க, கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. அதே ஓவரில் போல்ட் ரன் அவுட்டாக தனியாளாக மூன்று ஓவர்களில் அனைத்து பந்துகளையும் சந்தித்த பட்லர், கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து வெற்றி பெற வைத்திருந்தார்.

-Advertisement-

ராஜஸ்தான் அணிக்கே இந்த வெற்றி எதிர்பாராத நிலையில் சாம்பியன் போல ஆடி இருந்த ஜோஸ் பட்லர், 107 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதற்கு பின் தனது பினிஷிங் பற்றி பட்லர் பேசுகையில், “தொடர்ந்து நம்பிக்கை வேண்டும். அதுதான் இந்த போட்டியில் முக்கியமாக இருந்தது. நான் சில சமயங்களில் எனது ரித்ததை தவறவிட்டு கடுமையாக போராடி இருந்தேன். எனக்கு நெகட்டிவ் எண்ணங்கள் வரும்போது எல்லாம் அதற்கு எதிர்மாறாக சந்தித்து என்னை நான் செலுத்தி வந்து தான் அதில் வெற்றி கண்டு வருகிறேன்.

சில நேரங்களில் உங்களுக்கு விரக்தி உருவாகி உங்கள் மேலே கேள்விகளும் உருவாகும். அந்த சமயத்தில் எல்லாம் அனைத்தும் நன்றாக இருக்கிறது, நீ தொடர்ந்து இப்படி ஆடு எல்லாம் சரியாகும் என்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன். ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் கோலி என இருவரும் பலமுறை கடைசி வரை நின்று நம்பிக்கையும் கொடுத்து வெற்றி பெற்றதை நாம் நிறைய கண்டுள்ளோம். நானும் அதையே பின்பற்ற வேண்டும் என நினைத்து முயற்சி செய்தேன்.

அணியின் பயிற்சியாளர் சங்கக்காரவும் தொடர்ந்து நீ அவுட்டாகாமல் நிற்க வேண்டும் என்று சொல்வதுடன் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியை மாற்றும் ஒரு ஒரு ரிதம் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நான் நினைக்கிறேன். பெரிய ரன் சேசிங்கில் கடைசி பந்து வரை நின்று வெற்றி பெற வைப்பது மிகவும் திருப்தியாக உள்ளது” என பட்லர் கூறினார்.

-Advertisement-

சற்று முன்