- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் சுயநலவாதி.. அவரு விக்கெட் எடுக்காத காரணம் என்ன தெரியுமா.. விமர்சித்த பீட்டர்சன்..

அஸ்வின் சுயநலவாதி.. அவரு விக்கெட் எடுக்காத காரணம் என்ன தெரியுமா.. விமர்சித்த பீட்டர்சன்..

- Advertisement 1-

இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் நடந்தாலே அங்கே சுழற்பந்து வீச்சுக்கு சாதகங்கள் நிறைய இருக்கும். இதனால், பல சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளையும், மைல்கல்லையும் கூட எட்டி உள்ளனர். அந்த வகையில், இந்தியாவை எதிர்த்து அவர்கள் மண்ணில் டெஸ்ட் ஆடும் எந்த அணிகளாக இருந்தாலும் முதலில் அஸ்வினின் பந்து வீச்சை எதிர்த்து ஆடத் தான் திட்டமே போடுவார்கள்.

அந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துருப்புசீட்டாக இருக்கும் அவர், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் எடுக்காத ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த இன்னிங்சில் 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியையும் ஏறக்குறைய உறுதி செய்திருந்தார்.

இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை அஸ்வின் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நான்கு விக்கெட்டுகள் எடுத்தால் இந்த சாதனையை படைத்து விடலாம் என்ற வாய்ப்பு இருந்த போதும் முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்க முடியாததால் ஒரு விக்கெட் வித்தியசாத்தில் இந்த வாய்ப்பை அவர் தவற விட்டார்.

3 வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் தன்னை சிறப்பான முறையில் தயார் செய்து, நிச்சயம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் முதல் ஓவரிலேயே இந்த சாதனையை அஸ்வின் படைத்து விடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“அஸ்வின் தனது மைல்கற்களை நோக்கி பயணம் செய்து வருகிறார். இதனால் தான், எப்போதும் போல அவரால் தற்போது விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. குறிப்பிட்ட இடத்தில் அஸ்வின் பந்து வீசும் போது அபாயகரமான பவுலராக இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யாமல் வேறு இடங்களிலும், வேறு திசையிலும் பந்து வீசுகிறார்.

அவர் சிறந்த பவுலர் இல்லை என்றோ, அவரது டெக்னிக்கை இங்கிலாந்து வீரர்கள் கண்டுபிடித்து விட்டார் என்றோ நான் சொல்லமாட்டேன். ஆனால், தனி ஒரு வீரருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அணியின் மீது எப்போதும் கவனம் இருக்க வேண்டும். 500 விக்கெட்டுகளை எட்ட, அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட் மீதம் உள்ளது. அதனை அடைந்து விட்டால் ஒரு வேளை அதன் பின்னர் அவர் நிம்மதியாக பந்து வீசி தனது திட்டங்களை சரிவர வகுக்கலாம்” என பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்