- Advertisement -
Homeகிரிக்கெட்மனுஷனுக்கு இப்படி ஒரு மரியாதையா.. தோனியை பார்த்த மறுகணமே.. கே எல் ராகுல் செஞ்ச விஷயம்..

மனுஷனுக்கு இப்படி ஒரு மரியாதையா.. தோனியை பார்த்த மறுகணமே.. கே எல் ராகுல் செஞ்ச விஷயம்..

-Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மைதானத்தில் மாஸாக திகழும் அதே வேளையில் எதிரணியின் மைதானங்களில் தடுமாறி வெற்றிகளை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. சமீபத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியிலும் கூட இதே நிலைமைதான் தொடர்ந்திருந்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிலர் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

ரஹானே மற்றும் ஜடேஜா ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பை சேர்க்க, தோனி மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்ததால் சிஎஸ்கே அணி 176 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரில் நாட்கள் செல்ல 200 ரன்கள் என்பதே எளிதான இலக்காக இருக்கும் நிலையில், சிஎஸ்கே வின் இந்த ஸ்கோர் லக்னோ அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிப்பை உண்டு பண்ணவில்லை.

15 ஓவர்கள் முடிவில் ராகுல் மற்றும் டி காக் ஆகிய இருவரும் இணைந்து 134 ரன்களை முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்திருந்ததால், அடுத்த நான்கு ஓவர்களில் மீதமுள்ள வெற்றிக்கு தேவையான ரன்களையும் சேர்த்து விட்டனர். இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி இருந்த லக்னோ அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய புத்துணர்ச்சியாகவே அமைந்துள்ளது.

தொடர்ந்து தங்களின் அடுத்த போட்டியில் மீண்டும் சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்திலும் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் சந்திக்க உள்ளது. பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்துவதில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது என்றும் சொந்த மைதானத்தில் நடைபெற உள்ள அடுத்த மூன்று போட்டியில் நிச்சயம் அதில் கவனம் செலுத்துவோம் என்றும் சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கூறியிருந்தார்.

-Advertisement-

இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் தோனியை பார்த்ததும் கே எல் ராகுல் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை மனம் நெகிழ வைத்துள்ளது. 42 வயதாகும் தோனி இந்த வயதிலும் எதிரணி வீரர்களின் பந்து வீச்சாளர்களுக்கும் கடுமையான சவாலை கொடுத்து வருகிறார். 5 போட்டிகளில் பேட்டிங் செய்த தோனியை ஒரு முறை கூட யாராலும் இந்த சீசனில் அவுட் செய்ய முடியவில்லை. இந்த வயதிலும் ராஜாவாக திகழும் தோனி நல்ல ஒரு திறன் படைத்த கேப்டனாகவும் இருந்தார்.

அப்படி இருக்கையில், போட்டி முடிந்த பின்னர் தோனியிடம் கைகொடுக்க சென்றபோது தன் தலையில் வைத்த தொப்பையை மரியாதை நிமித்தமாக கழட்டினார் கே எல் ராகுல். இதன் பின்னர் தான் தோனிக்கு கைகுலுக்கவும் செய்திருந்தார். இந்திய அணியின் சீனியர் வீரராக இருந்தபோதிலும் தோனிக்கு அவர் கொடுத்த இந்த மரியாதை கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

-Advertisement-

சற்று முன்