- Advertisement -
Homeகிரிக்கெட்நாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. அந்த ஒருத்தரால இந்த சீசன் சம்பவம் பண்ணுவோம்.. நம்பிக்கையாக பேசிய...

நாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. அந்த ஒருத்தரால இந்த சீசன் சம்பவம் பண்ணுவோம்.. நம்பிக்கையாக பேசிய ராகுல்..

-Advertisement-

தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. ஒரு பக்கம் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், ட்ரெண்ட் போல்ட் என பட்டையை கிளப்பும் வீரர்களும், இன்னொரு பக்கம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் டி காக், ராகுல், படிக்கல், நிக்கோலஸ் பூரான், ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட பல வீரர்களும் இடம்பெற்று இருந்ததால் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியிலான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அது மட்டுமில்லாமல் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த போட்டியும் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தனர்.

அதிலும் ஐபிஎல் தொடர் வந்துவிட்டால் தனி விஸ்வரூபம் எடுக்கும் சஞ்சு சாம்சன், இந்த ஐபிஎல் தொடருடன் சேர்த்து கடந்த ஐந்து ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் அணி ஆடிய முதல் போட்டியில் அரைச்சதத்திற்கு மேல் அடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார். பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சஞ்சு சாம்சன் எதிர்கொண்ட பந்துகள் பவுண்டரி லைனுக்கு வெளியே பறந்ததால் 52 பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் மொத்தம் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமலும் களத்தில் இருந்தார்.

அவருடன் இணைந்து ரன் சேர்த்த ரியான் பராக், 29 பந்துகளில் ஒரு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த இருவரின் பங்களிப்பு பங்களிப்பு காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் கேப்டன் ராகுல் மட்டும் நிலைத்து நின்று நங்கூரம் போல ஆடி ரன் சேர்த்தார்.

-Advertisement-

ஒரு கட்டத்தில் போட்டி லக்னோவின் கையை விட்டு போனது போல் இருந்த சமயத்தில் தான் கேப்டன் ராகுல் பூரானுடன் இணைந்து ஓரளவுக்கு நம்பிக்கையான பார்ட்ன்ர்ஷிப்பை அமைத்திருந்தார். ஆனால் ராகுல் 58 ரன்களில் அவுட்டாக போட்டி மீண்டும் பரபரப்பை தொற்றிக் கொண்டது. பூரன் அதிரடியாக ஆடி கிடைக்கும் பந்துகளை எல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கடைசி மூன்று ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ஆனாலும் அஸ்வின், சந்தீப் ஷர்மா என ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட, 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின் பேசிய லக்னோ கேப்டன் கே எல் ராகுல், “எங்களுடைய இலக்கு பெரிதாக இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. நாங்கள் சில தவறுகளை இந்த போட்டியில் செய்தோம். பவர் பிளே பவுலரான மொஷின் கான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி தான்.

எங்களுக்காக ஆடி வருவது முதல் நவீன் உல் ஹக் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். அனைத்து அணிகளுக்குமே பவர் பிளே என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதில் சில தவறுகளை செய்து முதல் மூன்று விக்கெட்டுகள் சீக்கிரமாக நாங்கள் இழக்க, அதனை சேசிங் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதினோம்.

இனிமேல் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான வழிகளையும் நாங்கள் தேட வேண்டும். அதனை இங்கிருந்தே ஆரம்பித்து எங்கே எப்போது பலம் பெறுவோம் என்பதை அறியவும் ஆவலாக இருக்கிறேன். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மிகப்பெரிய ஒரு பாசிட்டிவாக எங்களுக்கு உள்ளார். ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் அவர்.

பொதுவாக ரன்கள் அடித்தால் எப்போதும் அனைத்து அணிகளுக்கும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதனை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதுதான் உங்களுக்கு அதிகமான மன நிம்மதியையும் தரும்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்