- Advertisement -
Homeகிரிக்கெட்இந்தா ஐபிஎல் ஆரம்பிச்சுருச்சுல்ல.. கடைசி பந்து வரை ட்விஸ்ட்.. 24 கோடி ஸ்டார்க்கிற்கு வந்த சோதனை..

இந்தா ஐபிஎல் ஆரம்பிச்சுருச்சுல்ல.. கடைசி பந்து வரை ட்விஸ்ட்.. 24 கோடி ஸ்டார்க்கிற்கு வந்த சோதனை..

-Advertisement-

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் சில சரித்திர நிகழ்வுகள் அரங்கேறி பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 16 ஆண்டுகளாக எந்த ஏலத்திலும் ஒரு வீரர் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு தொகைக்கு போனதில்லை. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகிய இருவரும் 20 கோடியை தாண்டி ஏலம் போயிருந்தது பெரிய அளவில் ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்திருந்தது.

அதுமட்டுமில்லாமல் கொல்கத்தா அணி ஸ்டார்க்கையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸையும் விலைக்கு வாங்கியிருந்தது. இந்திய வீரர்களால் கூட இத்தனை பெரிய தொகைக்கு ஏலம் போகாத நிலையில் வெளிநாட்டு வீரர்களை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருந்ததால் அவர்கள் எந்த அளவுக்கு தங்கள் அணிக்காக பங்கு வகிக்க போகிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

அப்படி ஒரு சூழலில் தான் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களின் முதல் போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான பில் சால்ட் 54 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதற்கு நடுவே நரைன், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ஷ்ரேயஸ் ஐயர் என அடுத்தடுத்து வந்த வீரர்கள் 10 ரன்கள் கூட தாண்டாமல் அவுட் ஆனதால் நல்ல ஸ்கோரை கொல்கத்தா எட்டுமா என்ற சந்தேகமே உருவானது.

ஆனால் ரசல் 25 பந்துகளில் மூன்று ஃபோர்கள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி 200 ரன்களை தாண்டவும் உதவி இருந்தார். இவரைப் போலவே இளம் வீரர் ராமன்தீப் சிங் 17 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து சற்று கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியும் அதிரடியாகவே ஆட்டத்தை தொடங்கியது.

-Advertisement-

10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 10 ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 110 ரன்கள் தேவை என்ற நிலை இருந்ததால், இரு அணிகளுமே வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால் அடுத்த ஐந்து ஓவர்களில் போட்டியே மாற, ஹைதராபாத் அணி வெற்றி பெறும் வாய்ப்பும் பறிபோனது போல தெரிந்தது. ஆனால் கடைசி 3 ஓவர்களில் 60 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது புது விஸ்வரூபம் எடுத்தார் க்ளாஸன். அடுத்த 2 ஓவர்களில் 7 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. முன்னதாக, 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் வீசிய 19 வது ஓவரில், 26 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் க்ளாஸன் சிக்ஸர் அடிக்க, அதன் பின்னர் 4 பந்துகளில் 2 விக்கெட்டுகள் செல்ல, கடைசி பந்தில் ஹைதராபாத் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பந்தை எதிர்கொண்ட கேப்டன் கம்மின்ஸ், ரன் எடுக்ககாததால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் சீஸனின் 3 வது போட்டி கடைசி பந்து வரை த்ரில்லாக சென்றதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்