- Advertisement -
Homeவிளையாட்டுநாங்க இந்த இடத்துல தான் சொதப்பிட்டோம்... இங்க தடுமாறிட்டோம்... இவங்க சீக்கிரம் அணிக்கு வருவாங்க -...

நாங்க இந்த இடத்துல தான் சொதப்பிட்டோம்… இங்க தடுமாறிட்டோம்… இவங்க சீக்கிரம் அணிக்கு வருவாங்க – தோல்விக்கு பின் குசால் மெண்டிஸ் பேச்சு

- Advertisement-

உலகக்கோப்பை தொடரின் 14வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததது. அணியில் தசுன் ஷனாகா மற்றும் பதிரானாவுக்கு பதிலாக சமிக்கா, லஹிரு குமாரா அணியில் இடம்பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, குசால் பெரேரா ஆகியோர் அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்களை சேர்த்த நிலையில், நிசாங்கா 8 பவுண்டரிகள் உட்பட 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவரைத்தொடர்ந்து பெரேராவும் 78 ரன்களில் வெளியேறினார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தே இருவரும் ஆட்டமிழந்தனர். இதனால் நிச்சயம் இப்போட்டியில் இலங்கை அணி 300 ரன்களை எடுக்கும் என நினைத்தபோது, மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 51 ரன்களுக்கு பறிகொடுத்து, மோசமாக பேட்டிங் செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேபடன் குசால் மெண்டிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார்.

- Advertisement-

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜாஷ் இங்லிஸ், ஷான் மார்ஷ் ஆகியோரின் அரை சதத்தால் 35.2 ஓவரில் 215 ரன்களை சேஸ் செய்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் குசால் மெண்டிஸ் பேசுகையில், பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் நாங்கள் சொதப்பினோம். ஸ்ட்ரைக்கை ரோடேட் செய்யாமல் அதிக டாட் பந்துகளை விளையாடினோம். ஒருவேளை நாங்கள் 290-300 ரன்களை எடுத்திருந்தால் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோராகா இருந்திருக்கும்.

கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் ஆடினாலும் இன்றைய போட்டியில் தடுமாறினோம். இன்னும் 6 போட்டிகள் இருக்கிறது நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். எங்கள் அணியின் பேட்டிங் யூனிட் மீது நம்பிக்கை உள்ளது. இன்றைய போட்டியில் மதுஷாங்கா சிறப்பாக பந்துவீசி துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து தந்தார். தசுன் ஷனாகா மற்றும் மதீஷா ஆகியோர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன் என பேசினார்.

சற்று முன்