- Advertisement 3-
Homeவிளையாட்டுபதிரனா பற்றி தோனி சொன்னதை ஏற்க முடியாது. அவருக்கு எது நல்லதுனு நான் சொல்றன். எனக்கும்...

பதிரனா பற்றி தோனி சொன்னதை ஏற்க முடியாது. அவருக்கு எது நல்லதுனு நான் சொல்றன். எனக்கும் பதிரனாவுக்கும் ஒரே ஆக்‌ஷன் தான். லசித் மலிங்கா பேச்சி

- Advertisement 1-

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம் பந்துவீச்சாளரான மதிஷா பதிரனா கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சென்னை கண்டெடுத்த ஒரு மகத்தான வீரர் என்றே அவரை கூறலாம். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் வீசும் துல்லியமான யார்க்கர்கள் மூலமாக விக்கெட்களை வீழ்த்தி, ரன்களையும் கட்டுக்கோப்பாக கொடுத்து வருகிறார்.

இதையெல்லாம் விட முக்கியக் காரணமாக இவரின் பவுலிங் ஆக்‌ஷனும் மலிங்கா போலவே இருப்பதால் ரசிகர்கள் 20 வயதாகும் பதிரனாவை குட்டி மலிங்கா என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பதிரனாவை சிறப்பாக பயன்படுத்தி வரும் தோனி இவரைப் பற்றி பேசியது கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றது.

தோனி அவரது பேச்சில் “பதிரனா, இலங்கை அணியின் சொத்தாக எதிர்காலத்தில் இருப்பார். ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடக் கூடாது. சிவப்பு பந்து  போட்டிகளுக்கு அவர் ஏற்றவர் இல்லை. அவரை ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கு மட்டும் இலங்கை வாரியம் பயன்படுத்த வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

தோனியின் இந்த கருத்தை லசித் மலிங்கா ஏற்க மறுத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் கூறுகையில் “ஐசிசி தொடர்களில் மட்டுமே பதிரனாவை விளையாட வைக்க வேண்டும் என தோனி விளையாட்டாக கூறியிருப்பார் என நினைக்கிறேன். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடினால் அவர் காயமடைந்து விடுவார் என்பதால் அப்படி சொல்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஆக்‌ஷன் கொண்ட நான் 6 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். அப்போது நான் காயம் என்று களத்தில் இருந்து வெளியேறியதே இல்லை.

- Advertisement 2-

எனக்கும் அவருக்கும் ஒரே ஆக்‌ஷன் என்பதால் அப்படி பந்துவீசுவதில் உள்ள சவால்கள் எனக்கு தெரியும். என்னைக் கேட்டால் அவர் எப்படியாவது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுவிட வேண்டும் என்றே கூறுவேன். அவர் ஒரு 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் கூட அவரது பிட்னெஸ் அதிகரிக்கும். விக்கெட்களை எப்படி எடுப்பது, ஸ்பெல்லை எப்படி உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கண்டுகொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: கோலி நம்பமுடியாத அளவுக்கு ஒரு இன்னிங்சை விளையாடினார். ஆனால் தினேஷ் கார்த்திக்? தோல்விக்கு காரணம் என்ன? – ஃபாஃப் டு பிளஸ்சி வேதனை

ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் உடல் ஒத்துழைக்கவிலை என்றால் உடனே மாற்று திட்டத்துக்கு செல்லலாம்” எனக் கூறியுள்ளார். பதிரனா பற்றி தோனி மற்றும் மலிங்கா ஆகிய இருவரும் வேறு வேறு கருத்துகளைக் கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.

சற்று முன்